அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இயற்கைவழி விவசாய திறந்த வெளிக் கலந்தாய்வு ...

வடமாகாண இயற்கைவழி ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பங்குகொள்ளும் இயற்கைவழி இயக்கத்தின் ஏற்பாட்டில் 'திறந்தவெளிக் கலந்தாய்வு' 22/23 ஆம் திகதிகளில் மன்னாரில் இடம்பெறவுள்ளது.

 மன்னார்   தட்சணமருதமடுவில் இன்று காலை 10 மணிக்கு  பண்ணைப் பெண்கள் அமைப்பால் நடாத்தப்படும் இயற்கைவழி விவசாயப் பண்ணையில் கலந்தாய்வு பேராசிரியர். சிறீஸ்கந்தராஜா அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகும். மதிய உணவின் பின்னர் ஒரு குழுவினர் தட்சணமருதமடுப் பண்ணையிலும் இன்னொரு குழுவினர் அடம்பன் பண்ணையிலும் கள ஆய்வில் ஈடுபடுவர்.

22 ஆம் திகதி (வெள்ளி) இரவு அனைவரும் அடம்பன் பண்ணை விடுதியில் தங்கியிருந்து அன்றைய கள ஆய்வில் பெற்ற தகவல்கள் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் பேண்தகு வளப்பயன்பாடு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைகளின் தேவை பற்றிய கலந்தாய்வில் ஈடுபடுவர். இக் கலந்தாய்வானது வெள்ளி இரவு 10 மணிவரை நீடிக்கும்.

23 ஆம் திகதி (சனி) அன்று இயற்கைவழி இயக்கத்தின் அடுத்தகட்டச் செயற்பாடுகள், மன்னார் மாவட்டத்தில் இயற்கைவழி இயக்கத்தினை வினைத்திறனான செயற்பாட்டியக்கமாக மாற்றுவதற்கான வழிமுறைகள், கிராமங்கள் தோறும் செயற்பாட்டாளர்களை உருவாக்குதல், பேண்தகு வளப் பயன்பாடு, கடந்தாண்டுச் செயற்பாடுகள் தொடர்பான மீள்பார்வை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படும். இந் நிகழ்வு மாலை 4 மணிவரை நீடிக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்துகொள்ளும் செயற்பாட்டாளர்கள் மீளத்திரும்புவதற்கான ஒழுங்குகளும், மூன்றுநேர உணவுடன் கூடிய தங்குமிட வசதிகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களை அறியவும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும் இயற்கைவழி இயக்கச் செயற்பாட்டாளர் வைத்தியகலாநிதி. ந. பிரபு (076 838 4466) அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
முன்கூட்டியே வருகையை உறுதிப்படுத்தியவர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.


மன்னாரில் இயற்கைவழி விவசாய திறந்த வெளிக் கலந்தாய்வு ... Reviewed by Author on February 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.