அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களிடம் -மன்னாரில் ஊடகவியலாளர்கள் கேள்வி-

வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை (10.02.2019) மன்னார் பகுதிக்கு விஐயம் செய்து மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் ஆளுனரின் செயலாளர் L.இளங்கோவன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் நகர சபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட ஐந்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்ட இவ் கூட்டத்தில் ஆளுனர் கலந்து கொண்டு உரையாடினார்.

இவ் கருத்தமர்வில் ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் எடுப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் செய்திகள் சேகரிக்க அதற்குள் அனுமதிக்கப்படவில்லை. -இது விடயமாக கருத்தமர்வு முடிவுற்றதும் செய்தியாளர்கள் ஆளுனரை சந்தித்தபோது கேள்வி... 


இன்று நீங்கள் கலந்து கொண்ட இவ் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்களை உள்வர அனுமதிக்காததின் காரணமென்ன?
-பதில் -அரச அதிகாரிகளுடன் மேற்கொண்ட சந்திப்பையே நான் இன்று மேற்கொண்டேன். இதனால் ஊடகவியலாளர்களை நான் இவ் நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிப்பதா இல்லையா என்பது தெரியவில்லை. -அத்துடன் எனக்கு விருப்பம் என்னவென்றால் வெறுமனே கருத்துக்களை முன்வைப்பதைவிட அவ் கருத்துக்கள் வெற்றியடையும்போது வெற்றிவாகை சூடும் மக்களோடு நான் ஊடகவியலாளர்களை சந்திப்பதிலே மகிழ்ச்சி அடைவேன். -அரசியல் வாதிகள் என்ன செய்வார்கள் என்றால் தங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். இதனால்தான் நான் என் கருத்துக்கள் முதலில் மக்களுக்குச் செல்லாமல் எனது செயல்பாடு வெற்றி அடைந்ததும் உங்களை சந்திப்பதிலேதான் மகிழ்ச்சி.


இவ் வடக்கு மாகாணத்துக்கு முதன் முதலாக ஒரு தமிழர் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார் என இவ் வாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கும் இவ் வேளையில் இன்று மன்னார் மாவட்டத்துக்கு முதன் முதலாக வந்திருக்கும் உங்களின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலைக்கு இன்று ஊடகவியலாளர்கள் தள்ளப்பட்டுள்ளது எமக்கு கவலை அளிக்கின்றது. இது விடயமாக -
பதில் -நிச்சயம் அடுத்தமுறை சந்தர்ப்பம் வழங்கப்படும். அவ்சமயம் நீங்கள் உங்கள் ஊடகவியலாளர்கள் அடையாள அட்டையை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் -

கேள்வி- -இன்று உங்கள் மன்னார் விஐயம் என்னவாக அமைந்தது?
-பதில்- -கிராம அலுவலர்கள் அரச ஊழியர்கள். இவர்கள்தான் கிராம மக்களுடன் அதிகமாக இருந்து செயல்படுபவர்கள். அவர்களுக்கு பலவிதமான கஷ்டங்கள் சவால்கள் இருக்கின்றன. அதை கேட்டு அறியவும் -அதுவும் மன்னார் மாவட்டம் அதிகம் வாய்ப்புக்கள் கொண்ட மாவட்டம். அடுத்த துபாயாக மாறக்கூடிய ஒரு மாவட்டம். எவ்வளவோ வளங்களைக் கொண்ட இடம். இவற்றை முன்னோக்கி செல்லக்கூடிய தரிசனம் எமக்கு கிடைக்க வேண்டும். இதற்கு மக்களின் அடிப்படை கருத்துக்களை பெறக்கூடிய வாய்ப்பு கிராம அலுவலகர்கள் மத்தியில்தான் உள்ளது. -மக்களின் கண்ணீர் கவலைகள் எல்லாம் அவர்களுக்குத்தான் புரியும். ஆதனால்தான் நான் முதலில் இவர்களைச் சந்தித்து சில விடயங்களை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றேன்.

கேள்வி- -இது விடயமாக கிராம அலுவலர்கள் எவ்விதமான பிரச்சனைகளை உங்கள் முன் வைத்துள்ளனர். -

பதில் -நாங்கள் இப்பொழுதுதான் அவர்களுக்கு சில வழிமுறைகளை காட்டியுள்ளோம். இனிமேல்தான் இவர்கள் இவ்விடயத்தை முன்னெடுக்க இருக்கின்றார்கள். -கிராம மட்டத்தில் மக்களின் கருத்துக்களை இவர்கள் பெற்று அரசாங்க அதிபர் ஊடாக எமக்கு தெரியப்படுத்துவார்கள். 'கிராம சக்தி' முதல் கட்டம் முடிவுற்ற நிலையில் தற்பொழுது இரண்டாம் கட்ட செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 கேள்வி-பேசாலையில் துறைமுகம் ஒன்று அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தங்களுடன் மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகின்றது இதுவிடயமாக?
பதில் -பேசாலையிலுள்ள சில சமூதாய மக்கள் இதுவிடயமாக எங்களிடம் கேட்கின்றனர். நாங்கள் அவர்களை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றோம். முதலில் அவர்களின் பிரச்சனைகளை நாங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அது துறைமுகம் அமைப்பது தொடர்பாகவா என்பது தெரியாது அவர்களை சந்தித்த பின்பே என்னவென்று தெரியவரும். இங்கு துறைமுகம் அமைப்பதா அல்லது வேண்டாமா என்பது அவர்களின் கருத்துக்களை அறிந்த பின்பே கூறமுடியும் என்றார்.


வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களிடம் -மன்னாரில் ஊடகவியலாளர்கள் கேள்வி- Reviewed by Author on February 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.