அண்மைய செய்திகள்

recent
-

ரணிலுக்கு நவநீதம்பிள்ளை தக்க பதிலடி! தப்பிப்பதாக குற்றச்சாட்டு -


இலங்கையில் நடந்த பாரிய படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், கொடூரமான குற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒப்பிட முடியாது என முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்று, இலங்கையில் போரின் போது நடந்த குற்றங்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி, மன்னித்து மறந்து விட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கும் கருத்து தொடர்பில் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ள நவநீதம்பிள்ளை, இலங்கையில் மிக மோசமாக நடந்த படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், கொடூரமான குற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை அரச தலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த விவாதத்துக்கு முன்னர், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை அளித்துள்ளது.
30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இன்னும் தாமதிக்கும் தந்திரத்தைக் கையாளுகிறது.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்று, சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி, மன்னித்து மறந்து விட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கிறார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செய்தியில், மிக முக்கியமான வாக்குறுதிகளான நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் காணவில்லை. போருக்குப் பின்னர் அரசாங்கம் நீதி, மற்றும் பொறுப்புக்கூறலுக்கு நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது,

ஆனால், அதற்குப் பதிலாக, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மாத்திரம் அமைச்சரவையிடம் அனுமதி கோரியிருப்பது. அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதைப் போல தோன்றுகிறது.
தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய தவறாக அர்த்தப்படுத்துகின்றனர். இது முற்றிலும் சரியான முறை என்று அர்த்தமில்லை. அந்தச் சூழலுக்கு அது பொருத்தமானதாக இருந்தது என்றார்.
ரணிலுக்கு நவநீதம்பிள்ளை தக்க பதிலடி! தப்பிப்பதாக குற்றச்சாட்டு - Reviewed by Author on February 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.