அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா தொடர்ந்தும் கால தாமதம் -


போர் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா.சபை தொடர்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 40வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலமைச்சர் ஐ.நா செல்வதற்கான விசேட குழு ஒன்றினை அமைத்து நாடுகள் மற்றும் மனித உாிமை அமைப்புக்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூறவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை அரசாங்கம் ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அல்லது நிறைவேற்ற தவறியிருக்கின்றது என்ற உண்மையையும் கூறவேண்டும்.
அதனை புலம்பெயர் தமிழர்கள், தமிழக தமிழர்கள் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்வதன் ஊடாகவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் கவனத்திற்கேனும் கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்வடாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
40 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே எங்களுடைய தரப்பினர் ஐ.நாவுக்கு சென்று, நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுடன் பேசவேண்டும். அதன் ஊடாக ஐ.நாவில் எமது முயற்சிகளுக்கு பயன்கிடைக்கும்.
அதேபோல் இம்முறையும் எமது தரப்பினர் ஐ.நாவுக்கு செல்வதன் ஊடாக இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணையக கூட்டத்தொடரில் தாம் செய்வதாக கூறிய விடயங்களையும் கூட இன்னமும் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தலாம் வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் இலங்கை அரசாங்கம் செய்வதாக கூறிய விடயங்கள் எதனையும் செய்யவில்லை. இராணுவ அதிகாரிகளை பாதுகாக்க நினைக்கிறது என்பதை தமிழர் தாயகத்திலிருந்து ஐ.நா செல்லும் சகல தரப்பினரும் கூறவேண்டியது கடமை.
இதற்கிடையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நாவு க்கு அனுப்பிவைக்க வேண்டும். அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழக தமிழர்களுடன் இணைந்து ஐ.நாவில் செயற்படவேண்டும்.
மேலும் போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் ஐ.நா பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் விடயத்தில் மந்தகதியாக செயற்படுவதும் வருத்தத்திற்குரியது என்றார்.

இதேவேளை இந்த முறை ஐ.நாவுக்கு தாங்கள் செல்வீா்களா? என ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், தாம் மீண்டும் அரச சேவையில் இணைந்துள்ளமையால் தமது அமைச்சு அதற்கான அனுமதியை வழங்கினால் செல்வேன் என்றார்.
தமிழர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா தொடர்ந்தும் கால தாமதம் - Reviewed by Author on February 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.