அண்மைய செய்திகள்

recent
-

ஈபிள் கோபுரத்தின் 130வது பிறந்தநாள்! பாரிஸில் கொண்டாட்டம் -


ஈபிள் கோபுரத்தின் 130வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரான்சின் அடையாளமாக இருக்கும் ஈபிள் கோபுரம் தனது 130வது ஆண்டை நிறைவு செய்கின்றது. இதனை கொண்டாடும் விதமாக இந்த வாரம் முழுவதும் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கோபுரத்தின் முதல் இரண்டு தளங்களில் இசைக்குழு ஒன்று அணிவகுப்பு நடத்த உள்ளது. ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அனைத்தும் இன்று இரவு 8.30 மணிக்கு ஐந்து நிமிடங்கள் வரை அணைக்கப்பட்டு, பின் மீண்டும் ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பாரிசில் அமைந்துள்ள இந்த ஈபிள் கோபுரத்தினை காண, ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈபிள் கோபுரத்தின் 130வது பிறந்தநாள்! பாரிஸில் கொண்டாட்டம் - Reviewed by Author on March 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.