அண்மைய செய்திகள்

recent
-

உடைக்கப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் அகற்றப்பட்ட வரவேற்பு வளைவினை தற்காலிகமாக மீண்டும் அமைக்க மன்னார் நீதிமன்றம் அனுமதி

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் அகற்றப்பட்ட வரவேற்பு வளைவினை மீண்டும் தற்காலிகமாக அமைத்து எதிர் வரும் நான்கு நாட்களுக்கு வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பணி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற போது இரு மதத்தினருக்கிடையில் இடம் பெற்ற முரண்பாடுகளைத்தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதோடு,குறித்த வரவேற்பு வளைவு உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில்,குறித்த வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகன்தினர் மன்னார் காவல்துறையினர் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.












குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை(4) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ தலைமையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ அகற்றப்பட்ட குறித்த வரவேற்பு வளைவிளை தற்காலிகமாக மீண்டும் அமைத்து எதிர் வரும் நான்கு நாட்களுக்கு வைக்குமாறு திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கினார்.
உடைக்கப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் அகற்றப்பட்ட வரவேற்பு வளைவினை தற்காலிகமாக மீண்டும் அமைக்க மன்னார் நீதிமன்றம் அனுமதி Reviewed by Admin on March 04, 2019 Rating: 5

2 comments:

Ramany Soma said...

"மதவெறியை தூண்டி தமிழ் மக்கழிடையே பிரிவை ஏற்படுத்திய முயற்சியும், பங்குத்தந்தை தலைமையில் உடைக்கப்பட்ட தமிழினத்தின் வரலாறு கொண்ட தி௫க்கேதீச்ர கோயில் நுளைவாயில் வளைவும்".

இது எம் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது மட்டுமல்லாமல், இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்று நினைக்கின்ற ஓ௫ சில நாசகரமான சக்திகளுமே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் இங்கே இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள, படங்களும், வீடியோக்களும், முளுமையாக உறிதிப்படுத்துகின்றது.

மன்னார் மாவட்டத்தில் இந்துக்கள் செறிந்து வாள்கின்ற இந்த இடத்தில், ஓ௫ சில கத்தோலிக்க மதத்தினரே இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது மிகவும் கவலைக்கிடமானதும், வேதனைக்குரிய ஓ௫ செயலாகவும் தெரிய வ௫கின்றது.

உன்மயில் இலங்கை அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எல்லா மதங்களின் உரிமைகளும் மதிக்கப்படுவதோடு மற்றுமல்லாமல்
அந்த மதங்களின் உரிமைகளும், பாதுகாக்கப்படவேண்டும்.
.

Ramany Soma said...
This comment has been removed by the author.
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.