அண்மைய செய்திகள்

recent
-

மைத்திரி மற்றும் ரணிலுக்கு அவசர கடிதம் எழுதியுள்ள இரா.சம்பந்தன்!


கேப்பாப்புலவு காணி விடுவிப்பு மற்றும் தோப்பூர் உத்தேச பிரதேச செயலகம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனித்தனியே கடிதங்களை எழுதியுள்ளார்.

இதன்படி, கேப்பாப்புலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ளதனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருப்பதோடு, அது தொடர்பாக தங்களோடு கலந்துரையாடியுமுள்ளேன்.

இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடனும் ஆயுதப் படைஅதிகாரிகளுடனும் நான் தொடர்புகொண்டு எடுத்தியம்பியுள்ளேன். இக்காணிகள் விடுவிக்கப்படுமென நீங்கள் உறுதிமொழி வழங்கினீர்கள்.
இது, ஆயுதப்படையினர் வசமுள்ள, புலம்பெயர்ந்த தமிழ் குடிமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் அனைத்தும் 2018 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என்ற தங்களுடைய கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவானதாகும்,

கேப்பாப்புலவிலுள்ள 70 ஏக்கர் பரப்புக்கொண்டகாணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இக்காணிகள் இப்புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பரம்பரைபரம்பரையாக பல நூற்றாண்டுகாலம் சொந்தமாகவிருந்தது.
அவர்கள் அதில் தங்கிவாழ்ந்து தமது சமூக, கலாசார மற்றும் சமய நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தியும் வந்தனர். இக்காணிகள் மீது அவர்களுக்குப்பெரும் பற்றுதல் உண்டு.
இப்புலம்பெயர் தமிழ் மக்கள் இக்காணிகள் மீது மட்டற்ற பற்றுகொண்டுள்ளனர். எனவே தமது அக்காணிகளைத் திரும்பப் பெறுவதில் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். குறிப்பாக இக்காணிகளை விடுவிப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கிய ஒருபெரும் முன்னெடுப்பாக அமையும்.

தனியார் காணிகளை விடுவிப்பதை சாதகமான முறையில் பரிசீலிக்க தாங்கள் விரும்புகிறீர்கள் என்பதைநான் அறிவேன். இக்காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென தாங்கள் தீர்மானமொன்று மேற்கொள்ள வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தோப்பூர் உத்தேச பிரதேச செயலகம் தொடர்பில் பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“திருகோணமலைமூதூர் பிரதேசசெயலாளர் பிரிவில் தோப்பூர் பிரதேசசெயலாளர் பிரிவு என அழைக்கப்படும் ஒரு புதிய பிரிவை ஏற்படுத்துவதன் மூலம் தற்போதைய மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவை பிரிப்பதற்கான முன்மொழிவு
1.திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவு என அறியப்படும் ஒரு பிரதேச செயலாளர் பிரிவு தற்போது உள்ளது.
2.மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு தமிழர் பெரும்பான்மையினராகவிருந்த ஒரு தமிழ் பிரிவாகிய முன்னைய (ஆரம்பகால) கொட்டியாபுர பற்று பிரிவின் ஓர் உப பிரிவாகும்.

3.கொட்டியாபுர பிரிவு மூன்று உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது:
  • மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு
  • சேருவில பிரதேச செயலாளர் பிரிவு
  • வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு
4. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும் ஆரம்பத்தில் தமிழர் பெரும்பான்மையாகவிருந்த ஒரு பிரதேசமேயாகும். யுத்தம் காரணமாகபெரும் எண்ணிக்கையிலான தமிழர் இடம்பெயர்ந்து தற்போது திருகோணமலை மாவட்டத்தின் அல்லது நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெளிநாடுகளிலும் வசிப்பதையடுத்து, மூதூர் பிரதேசம் தற்போது முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசெயலகப் பிரிவாக உள்ளது. அது 70,188 பேரைக்
கொண்டிருக்கிறது. அவர்களுள் 42,599 பேர் முஸ்லிம்கள், 26,608 பேர் தமிழர். 981 பேர் சிங்களவர்.
5.தற்போதைய முன்மொழிவு முஸ்லிம்களை பெரும்பான்மையினராகவும் ஒரு சில தமிழர்களையும் கொண்ட தோப்பூர் பிரதேச செயலகப்பிரிவு என்றழைக்கப்படும் இன்னமொரு முஸ்லிம் பெரும்பான்மை பிரிவை ஏற்படுத்துவதற்கானதாகும். இதன் விளைவாக ஏற்படும் நிலையானது, இரண்டு முஸ்லிம் பெரும்பான்மை பிரிவுகள் இருக்கும் என்பதாகும்:
  • மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவு
  • தோப்பூர் பிரதேசசெயலாளர் பிரிவு
இவ்விரு பிரிவுகளிலும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராகவே இருப்பர். இது அவர்களது எதிர்காலத்திற்குப் பாதகமானதாகும்.
6.அத்தகைய முன்மொழிவிற்கு அனுமதிகோரி அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அல்லது விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக எனக்குஅறியக் கிடைக்கிறது.
7.நான் இம்மாவட்டத்தைச் சேரந்த ஒருசிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், இவ்விடயம் தொடர்பாக என்னுடன் கலந்துரையாடப்படவில்லை. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோடும் கலந்துரையாடப்பட்டதாகத் தோன்றவில்லை.
8.தமிழ் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்திருந்தும் மூதூர் பிரதேசசெயலகப் பிரிவின் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் இன்னும் 40 வீதத்தினராக உள்ளனர் என்பதை நீங்கள் காண்பீர்கள். தமிழ் மக்களை
  • மூதூர் பிரதேசசெயலகப் பிரிவு.
  • தோப்பூர் பிரதேசசெயலகப் பிரிவு என இரண்டுபிரதேசசெயலகப் பிரிவுகளில் பிரித்து இரு பிரிவுகளிலும் அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் வண்ணம் செய்வது அநீதியானதாகும்.
9.அநீதி இழைக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்த அனைத்து மக்களது பிரதிநிதிகளோடும் உரிய கலந்துரையாடல்கள் செய்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய முன்மொழிவு தமிழ் மக்களுக்குபெரும் அநீதி விளைவிக்கும்.
எனவே, தற்போதைய முன்மொழிவு முன்கொண்டு செல்லப்படலாகாது என்றும் அனைவருக்கும் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு மக்களது பிரதிநிதிகளோடும் உரியகலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டுமென்றும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
தோப்பூர் பிரதேசசெயலகப் பிரிவு என்று பெயரிடப்பட்ட இன்னமொரு முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசெயலகப் பிரிவை ஏற்படுத்துவதற்கான தற்போதைய முன்மொழிவு இறுதித் தீர்மானங்கள் எட்டப்படும் வரை நிறுத்தப்படவேண்டுமென நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன். ” என அவர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரி மற்றும் ரணிலுக்கு அவசர கடிதம் எழுதியுள்ள இரா.சம்பந்தன்! Reviewed by Author on March 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.