அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் ஐ.நாவில் வெளியான பல தகவல்கள் -


2 வருட கால அவகாசத்தினை நிபந்தனைகள்,கட்டுபாடுகள்,நடைமுறை திட்டங்கள்,கண்காணிப்பு பொறிமுறைகள் என்பன இல்லாமல் மீண்டும் இலங்கைக்கு வழங்குவதென்பது சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றது என தமிழர் மரபுரிமை இயக்கத்தின் இணை தலைவர் நவநீதன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தாயகத்தின் நிலைமை, தமிழர் மரபுரிமை இயக்கத்தின் தோற்றம் அல்லது அவற்றின் தோற்றம் பற்றி லங்காசிறியின் 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தமிழின அழிப்பு தொடர்பில் சரியான புரிதலுடன் செயற்பட வேண்டியது மிக அவசியம்.
30 / 1 என்ற தீர்மானம் சரியான ஒரு கால அட்டவணையை பெறவில்லை.இந்நிலையில் இலங்கை அரசாங்கம் எதனையுமே நிறைவேற்றவில்லை என்பது மிக வேதனைக்குரியது.
மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் ஒருமித்த கருத்து இல்லாதது என்பது வேதனைக்குரிய விடயம்.

இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கலாம் என்ற ரீதியில் இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆணையை வழங்கவில்லை என்பது உண்மை.
பெயரளவிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பிரதிநிதி ஆனால் இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கலாம் என்ற விடயத்தில் மக்களின் விருப்பத்திற்கு மாறான ஒரு தீர்மானத்தினை எடுப்பதென்பது வெளிப்படையாகவே காணப்படுகின்றது.

அண்மைய போராட்டம்,பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் என்பன தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமல்லாது சர்வதேசத்திற்கும் நாங்கள் கால அவகாசத்திற்கும் தயார் இல்லை என்பதனையே கூறுகின்றது.
மன்னார் புதைக்குழி தொடர்பில் நீதிமன்ற வழக்கு காணப்படுவதால் என்னால் கருத்து கூறமுடியாது.ஆனால் குறித்த அறிக்கை உண்மைக்கு புறம்பானவை ஆகும்.
ஆனால் மன்னார் புதைக்குழி தொடர்பில் நிபுணதுவ ஆய்வறிக்கையின் ஊடாகவும்,நீதிமன்ற நடவடிக்கை ஊடாகவே தகுந்த தீர்வினை பெறமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் ஐ.நாவில் வெளியான பல தகவல்கள் - Reviewed by Author on March 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.