அண்மைய செய்திகள்

recent
-

காதில் சீழ்வடிதலை எளிய முறையில் போக்க வேண்டுமா?


சளி போன்ற நோயுடன் இரண்டாம் நிலை பாக்டீரியா நோய்தொற்றுவினால், காதுகளிலிருந்து திரவம் வடிதல் ஏற்படுகிறது.
இது நமது காதில் இருந்து சீழ் போன்று அல்லது திரவநிலை கழிவுகள் போன்று வெளி வருகின்றது.

சில நேரங்களில் இது அதிக வலியை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றது.
இதற்கு உடனே காதில் எண்ணெய் ஊற்றக் கூடாது. அதற்கு பதில் நம் முன்னோர்கள் கையாண்டு வந்த சில கை மருந்துங்களை இங்கு பார்ப்போம்.
  • தேங்காய் எண்ணெய், வெள்ளை வேளைகீரை, நாயுருவி வேர், பொரித்த பெருங்காயத் தூள், பூண்டு பொடியைத் தேனுடன் சாப்பிடலாம்.
  • தூதுவளையை நீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரைக் குடிக்கலாம்.
  • தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டிக் கசக்கிச் சாறு பிழிந்து அதில் சில துளிகளைக் காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் சப்தம் ஆகியவை குறையும்.
  • நல்லெண்ணெயில் ஒரு கிராம்பைப் போட்டுச் சூடு செய்து, பின் அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை வலி உள்ள காதில் 2 துளி விடலாம்.
  • முள்ளங்கிக் கிழங்கின் சாறு 50 மி.லி.யில், இஞ்சி 3 கிராம் சேர்த்துச் சாப்பிடலாம்.
  • தும்பைப்பூ, சுக்கு, காயம் ஆகியவற்றைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.
  • தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றைத் தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.
  • கடுகை நன்கு அரைத்து, அதைக் காதுக்குப் பின்னால் பற்று போட்டு வைக்கலாம்.
  • பூண்டின் தோலை உரித்துத் தலைப் பக்கம் கிள்ளிவிட்டுக் காதில் வைக்கலாம்.
  • தேனுடன் துளசிச் சாற்றைக் கலந்து குடிக்கலாம்.
  • வேளைக்கீரை இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, இரண்டு சங்களவு சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு அதே அளவு நல்லெண்ணெயைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை காதுக்கு 2 துளி வீதம் விட்டுப் பஞ்சடைத்து வந்தால் காது இரைச்சல் குணமாகும்.
  • அரிசித் தவிடு எடுத்து ஒரு கைக்குட்டையளவு துணியில் கட்டி ஓடு (உடைந்த ஒட்டை) அடுப்பில் போட்டுச் சுட்டு அதைத் தவிட்டுடன் வைத்துக் கட்ட வேண்டும். ஓட்டில் உள்ள சூடு கைக்குட்டையளவு போகும். காதைச் சுற்றி ஒத்தடம் கொடுக்கப் பலன் கிடைக்கும்.
  • வெள்ளைப் பூண்டு, மிளகு இரண்டையும் இடித்துத் துணியில் வைத்துக் கசக்கிப் பிழிந்தால் சாறு வரும். ஒரு துளி காதில் விட, முதலில் எரியும். பின் குளிர்ந்துவிடும்.
  • தைவளை இலையை இடித்துச் சாறெடுத்து நல்லெண்ணெய் கலந்து சூடேற்றிக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி காதில் இரண்டு சொட்டு விடலாம்.

காதில் சீழ்வடிதலை எளிய முறையில் போக்க வேண்டுமா? Reviewed by Author on March 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.