அண்மைய செய்திகள்

recent
-

அடிக்கடி ஏலக்காய் டீயை குடிங்க... இந்த நோயிலிருந்து விடுபடலாமாம்!


அன்றாட சமையலில் உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள் தான் ஏலக்காய்.
ஏலக்காயில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, பி, சி, ரிபோஃப்ளேவின் போன்றவை அதிகமாக உள்ளதால் இது பல வித நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

ஏலக்காய் டீயைக் குடிப்பதால் புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை பலவித நோய்களை அடியோடு அழிக்க உதவுகின்றது.
தற்போது ஏலக்காய் டீயைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

  • ஏலக்காய் டீயைக் குடித்தால், ஏலக்காயில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, உடலை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
  • உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு அப்படியெனில் ஏலக்காய் டீயைக் குடியுங்கள். இதனால் நுரையீரலில் இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, உயர் இரத்த அழுத்தமும் குறையும்.
  • அடிக்கடி தலை வலிக்கும் போது ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது ஏலக்காய் டீயைக் குடியுங்கள். இதனால் விரைவில் தலைவலி மறையும்.
  • செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, ஏலக்காய் டீயைக் குடியுங்கள். இதனால் அஜீரணக் கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவை நீங்கும்.
  • இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு, ஏலக்காய் டீ மிகவும் நல்லது. அதிலும் தினமும் ஏலக்காய் டீயைக் குடித்து வந்தால், இதய நோய்களில் இருந்து விடுபடலாம்.
  • ஏலக்காய் டீ, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். வேண்டுமானால், தினமும் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர்வீர்கள்.
அடிக்கடி ஏலக்காய் டீயை குடிங்க... இந்த நோயிலிருந்து விடுபடலாமாம்! Reviewed by Author on March 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.