அண்மைய செய்திகள்

recent
-

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா?


பொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு, கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழே வரக்கூடும்.
பொதுவாக கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கிய காரணம், சருத்துளைகளில் அழுக்குகள் தங்கி, அவ்விடத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருமையாக மாற்றும்.

இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். அதை தற்போது பார்ப்போம்.
  • பேக்கிங் சோடா, கரும்புள்ளிகளை நீக்க மிகவும் சிறப்பான பொருள். அதற்கு பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் தேய்த்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
  • பட்டையை பொடி செய்து, அதனை தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகளைப் போக்கலாம்.
  • எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரித்துக் காணப்படும்.
  • ஓட்ஸ் பொடியை தயிருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இறந்த செல்கள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி சருமம் பொலிவோடு இருக்கும்.
  • தேன் சருமத்திற்கும், கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் சிறந்தது. மேலம் சருமத்தினை இறுக்குவதற்கும், சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்கும் தேன் மிகவும் சிறப்பான பொருள். ஆகவே இதனை முகத்திற்கு போடும் மாஸ்க்கிலோ அல்லது தினமும் முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வருவதோ நல்லது.
  • க்ரீன் டீ போட்டு குடித்த பின்னர், அதன் இலைகளைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.
  • பால் மிகவும் அற்புதமான கரும்புள்ளிகளைப் போக்க உதவும் அழகு பராமரிப்பு பொருள். எனவே அந்த பாலைக் கொண்டு தினமும் 2-3 முறை முகத்தை பஞ்சு பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் சருமம் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.
  • முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, கரும்புள்ளிகளைப் போக்கும்.
  • தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வருவதன் மூலம், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் தினமும் முகத்தை 3 முறை கழுவி வர வேண்டும். இதனாலும் முகத்தில் அழுக்குகள் தங்குவதைத் தடுக்கலாம்.
  • சர்க்கரையை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் அழகாக இருக்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? Reviewed by Author on March 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.