அண்மைய செய்திகள்

recent
-

பிரமாண்டமாக நடந்து முடிந்த IBC குறும்பட திருவிழா,பரிசுகளை வழங்கிய வெற்றிமாறன், அமீர்,


தமிழ் சினிமா கடந்த சில வருடங்களாக யார் வேண்டுமானாலும் எளிதில் படம் இயக்கலாம் என்ற வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் குறும்படங்களே முதன்மையாக உள்ளது.

ஆம், குறும்படம் ஒரு கலைஞனுக்கு விசிட்டிங் கார்டாக இருந்து வருகின்றது, ஒரு குறும்படத்தில் தன் திரைப்பயணத்தை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் இன்று இந்தியாவே வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டாரை வைத்து பேட்ட படத்தை கொடுத்தவர்.

அந்த வகையில் இன்னும் பல இயக்குனர்களை உருவாக்கும் விதத்தில் IBC தளம் லண்டனில் 2018ம் ஆண்டிற்கான குறும்பட போட்டியை நடத்தினர். இதன் நடுவர்களாக வெற்றிமாறன், அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் பரிசளிப்பு விழா கடந்த ஞாயிறு அன்று நடக்க, இந்த போட்டியில் ‘சருகவெளி’ என்ற குறும்படம் தான் முதல் பரிசை வென்றது.

அதோடு அந்த குறும்பட இயக்குனர் செல்வரத்தினம் பிரதீபனுக்கு வெள்ளித்திரையில் படம் இயக்கும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்துள்ளது.



மேலும், சிறந்த இசைக்கான குறும்படமாக சனம் தேர்வானது.

சிறந்த ஒளியமைப்பிறகான குறும்படம் - த டெமன்ஸ் ஸ்லேவ் தேர்வானது.

சிறந்த படத்தொகுப்பாளரான த டெமன்ஸ் ஸ்லேவ் குறும்படத்தின் படத்தொகுப்பாளர் கெனிங்ஸ்ரன் தேர்வானது.

த போடர் குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் சிவராஜ் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்றுக்கொண்டதுடன், சிறந்த குழந்தை நட்ஷத்திரமாக சனம் குறும்படத்தில் நடித்த ஜீனலோஜனி வென்றார்.

சிறந்த நடிகை சனம் குறும்படத்தின் நடிகை கோசினியும், சருகுவெளி குறும்படத்தில் நடித்த அர்ஜுன் ராதாகிருஷ்ணன் சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றனர்.

வெடி குறுந்திரையின் திரைக்கதை ஆசிரியர் மதி சுதா சிறந்த திரைக்கதையாளராக தேர்வானது.

இது மட்டுமின்றி வெற்றிமாறன் மற்றும் அமீர் ஆகியோர் ஈழத் தமிழர்களின் வலிகளை மையப்படுத்தி தமிழ் திரையுலகில் திரைப்படமொன்றை தயாரிப்பதற்கான சிக்கல்கள் குறித்தும் பேசினர், இதோ...

பிரமாண்டமாக நடந்து முடிந்த IBC குறும்பட திருவிழா,பரிசுகளை வழங்கிய வெற்றிமாறன், அமீர், Reviewed by Author on March 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.