அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனிதப் புதைகுழியுடன் தமிழ் அரசனுக்கு தொடர்பா? அரச வாரிசு வெளியிட்ட தகவல் -


மன்னார் மனித புதைகுழிக்கும் சங்கிலிய மன்னர்களுக்கும் தொடர்பு இல்லை என சங்கிலிய மன்னனின் வாரிசு எனக் கூறப்படும் இளவரசர் கனகராஜா தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் இவர் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 40ஆவது மனித உரிமைக்கூட்டத்தொடரில் கலந்து கொண்டபோது அங்கு இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது வம்சாவளியினர் ஆட்சி செய்த காலத்தில் இவ்வாறான கொலைகள் இடம்பெற்றன எனினும் அப்போது உயிரிழந்தவர்கள் அவ்விடத்தில் புதைக்கப்படவில்லை.

அங்கு உயிரிழந்தவர்களுக்கு தனியாக சமாதி அமைத்தே அவர்கள் புதைக்கப்பட்டார்கள், இந்த மன்னார் மனித புதைகுழி அப்போது உயிரிழந்தவர்களுடையது அல்ல.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சரியான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை கண்டறிய வேண்டும்.
மேலும், மன்னார் மனிதப் புதைகுழியில் உள்ள எலும்புக்கூடுகளைப் பார்த்தால் எமது மன்னர் காலத்தில் இடம்பெற்றது என்று கூற முடியாது.
இந்த எலும்புக்கூடுகளோடு பிஸ்கட் பை என்பனவெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவே இது மன்னர் காலத்திற்குரியது அல்ல, இதனை இலங்கை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

விசாரணைகளின் மூலம் இது மன்னர் காலத்திற்குரியது என கண்டறிந்தால் அது சப்புமல் குமாரயா ஆண்ட காலமாக இருக்கலாம், இந்திய மன்னர்கள் ஆண்ட காலமாக இருக்கலாம், ஏன் போர்த்துகீசர்கள் மற்றும் பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இது நடந்திருக்கலாம்.

ஆனால் இது சங்கிலிய மன்னர் காலத்தில் இழைக்கப்பட்ட குற்றம் என கூறுவது தவறுதானே. சங்கிலிய மன்னர்களுக்கும் மன்னார் மனிதப் புதைகுழிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நான் வலியுறுத்துகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மனிதப் புதைகுழியுடன் தமிழ் அரசனுக்கு தொடர்பா? அரச வாரிசு வெளியிட்ட தகவல் - Reviewed by Author on March 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.