அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை-

காணமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் பிராந்திய காரியாலயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில்

காணாமல் ஆக்கப்படோருக்கான அலுவலகம் எங்கு திறந்தாலும் அதில் தமக்கு நம்பிக்கை இல்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் இணைப்பாளர் அன்ரன் சகாயம் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் அலுத்தம் காரணமாக சர்வதேசத்தை ஏமற்றுவதற்கும் பொறுப்பு கூறலில் இருந்து தப்பிப்பதற்காகவுமே இந்த காணமல் ஆக்கப்படோருக்கான காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது காணமல் ஆக்கப்பட்டவர்களின் எந்த ஒரு பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளாது அரசாங்கத்தின் நிகழ்சி நிரலை நடை முறைப்படுத்துவதற்காகவே இந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்காண அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ் அலுவலகம் இயங்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியும் இன்னமும் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்த வித உண்மை நிலையையும் கண்டறியாமல் ஒரு அதிகாரம் அற்ற ஒரு அமைப்பாக காணப்படுவதனாலே நாங்கள் இந்த அலுவலகத்தை எதிர்கின்றோம்.

நேரடியாக இறுதி யுத்ததில் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள் தொடர்பாக கூட இவர்கள் இதுவரை எந்த ஒரு கண்டறிதலையும் மேற்கொள்ளாத நிலையில் எவ்வாறு யுத்ததில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் அதற்கு முன்பாக காணமல் ஆக்கப்பட்டவர்கள் விடயங்களை கண்டறிவார்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இலங்கைகு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் கொடுக்க வேண்டாம் என மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய போதும் ஒரு சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கால அவகாசத்துக்கு கையொப்பம் இட்டு விட்டு தற்போது கால அவகாசம் கொடுக்க வேண்டாம் என பொய்யாக மக்களிடம் நாடகம் ஆடுவதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேசம் தமிழரின் பிரச்சினைகளை தீர்க்குமோ.... தெரியவில்லை ஆனாலும் அவர்களை விட எங்களுக்கு வேறு வழி இல்லை என்பதாலே நாங்கள் சர்வதேசத்தை நம்புவதாகவும் தெரிவித்தார்.

மன்னார்-காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை- Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.