அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் தடயவியல் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !


மன்னார் மனித புதைகுழி தொடர்பில் தடயவியல் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! காதில் பூ வைத்த அரசாங்கம்
மன்னார் மனித புதைகுழி அழிவில் சிக்கிய எலும்புக்கூடுகள் அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் அந்த புதைகுழி கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்தவர்,

“மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.

மனித எச்சங்கள் மண்ணின் தரம் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப அது பாதுகாக்கப்படும் காலம் வேறுபாடும். நான் நேரில் பார்த்த தடவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கால அளவிற்கு உட்பட்டதல்ல என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என கூறமுடியும்.

இலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடவியல் ஆய்வாளர்கள் இல்லை என்பது என் கருத்து. இவர்கள் உபயோகிக்கின்ற டேட்டிங் முறை தவிர்த்து மனித எலும்புக்கூட்டில் உள்ள பல்லை வைத்து சரியான பிறந்த நாளையே கண்டுபிடிக்க முடியும்.

சர்வதேச மனித உரிமை ஆணையகம் பரிந்துரைக்கும் தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்” என கூறியுள்ளார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் தடயவியல் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! Reviewed by Author on March 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.