அண்மைய செய்திகள்

recent
-

வாய்ப்புண்ணை போக்க வேண்டுமா?


நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும்.
இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும் என்று சொல்லப்படுகின்றது.

வாய் புண் இது பொதுவாக இடத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவந்த புண்ணாக ஏற்பட்டு இருக்கும்.
இது பொதுவாக நாக்கு, உதடு, ஈறுகளில் அல்லது கன்னத்தின் உள்பக்கம் ஏற்படும்.
மேலும் ஒரு வாய் புண் சரியாக 7 முதல் 10 நாட்களுக்கு எடுக்கும். சிலருக்கு இது மிகவும் எரிச்சலை ஏற்படுத்தி விடுகின்றது.
அதற்கு மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும். தேங்காய் பாலில் வாய்ப்புண்ணையும் ஆற்றும் சக்தி மிக அதிகமாகவே உள்ளது.
  • ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமையும்.
  • 2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளிக்கவும்.
  • 1 கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி தனியா சேர்த்து கொதிக்கவிடவும். லேசாக சூடானதும் வடிகட்டி இதை வைத்து வாய் கொப்புளிக்கவும். ஒரு நாளைக்கு 3-4 முறை இதை பின்பற்றவும்.
  • ஒரு நாளைக்கு 3-4 முறை தக்காளி பழச்சாறு கொண்டு வாய் கொப்புளிக்கவும். அதேபோல ஒரு நாளைக்கு 3-4 முறை பச்சை தக்காளி அல்லது தக்காளிச்சாறு சாப்பிடவும்.
  • 1 தேக்கரண்டி கிளிசரைனில் மஞ்சள் பொடி சேர்த்து அதை பேஸ்டை அப்ளை செய்யவும். தண்ணீரில் சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க வைத்து அது வெதுவெதுப்பான பிறகு வாய் கொப்பிளிக்கவும்.
  • 5-6 துளசி இலையை மென்று சாப்பிட்டு பிறகு தண்ணீர் குடிக்கவும். வாய் புண் ஏற்படும் போதெல்லாம் இதை 5-6 முறை செய்யவும்.
  • கற்பூரம் மற்றும் கற்கண்டு கலவையை அப்ளை செய்து வர மௌத் அல்சர் சீக்ரம் குணமடையும். கற்கண்டை உடைத்துப் போட்டால் காற்றின் ஈரப்பதத்தில் அது கரைய ஆரம்பித்து விடும். அதில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்து குழைத்து வாய்ப்புண்ணில் தடவ சீக்கிரம் குணமடையும்.
  • வாழைப்பழம் மற்றும் தயிர் காலையில் சாப்பிடுங்கள். சூடான மற்றும் காரமான உணவை உண்ணாமல் தவிர்க்கவும். அதேபோல மதிய வேளையில் வாழைப்பழத்தோடு சிறிது தயிர் மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் குணமடையும்.
  • தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கலவையுடன் ஈறுகளை மசாஜ் செய்யவும். வாய் புண்களுக்கு நிரூபிக்கப்பட்ட வீட்டு வைத்தியத்தில் இது ஒன்றாகும்.
  • பெரிய நெல்லிக்காய் எனப்படும் இந்தியன் கூஸ் பெர்ரியை பேஸ்ட் செய்து அதை மௌத் அல்சரில் நேரடியாக அப்ளை செய்யவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை அது புண்களை எவ்வாறு குணப்படுத்துகிறது என்பதைப் பாருங்கள்.
  • கசகசாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து அந்த கலவையை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வாய்ப்புண்ணை போக்க வேண்டுமா? Reviewed by Author on March 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.