அண்மைய செய்திகள்

recent
-

அங்கிகரிக்கப்பட்ட நிறுவனமாக விளங்கும் அரச வங்கியில் சேமிப்பை இடுங்கள்-மன்னார் மக்கள் வங்கி முகாமையாளர் பிரதீப்

கிராமபுறங்களில் சட்டபூர்வமற்ற முறையில் சீட்டுக்களைப் பிடித்து
இடைக்காலங்களில் ஏமாற்றப்பட்டவர்களாக பணத்தையும் இழந்து நடு வீதியில் நிற்கும் நிலைக்கு உங்களை நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள் என மன்னார் மக்கள் வங்கிக் கிளை முகாமையாளர் க.பிரதீப் இவ்வாறு தெரிவித்தார்.

மகளீர் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (08) மன்னார் மக்கள்
வங்கிக் கிளையில் மகளீர் தின விழாவை கொண்டாடியபோது மன்னார் மக்கள் வங்கி கிளை முகாமையாளர் க.பிரதீப் இங்கு மகளீர் மத்தியில் தொடர்ந்து
உரையாற்றுகையில்

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதேச செயலாளர்
பங்களிப்புடன் இவ் விழா இங்கு நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியதொன்றாகும்.

இவ் நிகழ்வை நாங்கள் மன்னார் மக்கள் வங்கியில் ஒழுங்குபடுத்தியிருப்பது
இரண்டு நோக்கங்கள் கொண்டே. அதாவது மகளீர் மத்தியில் சமூகப்படுத்தப்பட்ட நோக்கம். அடுத்து நிறுவனப்படுத்தப்பட்ட நோக்கமாகும்.

சமூகப்படுத்தப்பட்ட நோக்கமானது சமூகத்தில் பெண்களுக்கு வங்கியலாளர்களாகிய நாங்கள் எவ்வாறு உங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

அதாவது நிதியல் சார்ந்த விடயத்தில் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு
அவசியமாகிறது. இவர்கள் எவ்வாறு நிதியலில் எவ்வாறு ஒழுக்கம் உள்ளவர்களாக இந்த சமூகத்தில்  இருக்கின்றார்கள் என்பதை தெளிவூட்ட இவ் சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறிப்பாக கிராம மட்டங்களிலும் சமூக மட்டங்களிலும் சிறு சிறு
சேமிப்புகளில் ஈடுபட்டுவரும் மகளீர் எவ்வாறு அங்கிகரீக்கப்பட்ட அமைப்பாக
தங்களை பதிவு செய்து ஒரு நிறுவனத்திலோ அல்லது அமைப்பிலோ சிறந்த அமைப்பில் இணைய என்ன செய்ய வேண்டும் என்ற நிதியல் திட்டத்தில் அரசியல் வங்கியலாளராகிய நாங்கள் தெரியப்படுத்த வேண்டியவர்கள்.

இங்கு மாந்தை மேற்கு பிரதேச பகுதி மகளீர் அமைப்புகளுடைய உறுப்பினர்கள் நீங்கள் இவ் நிகழ்வில் கலந்து கொள்ளுகின்றீர்கள்.

நீங்கள் எவ்வாறு உங்கள் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்வது இவ்விடயத்தில்
உங்களை நீங்கள் எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பதை உங்களுக்கு
தெளிவுப்படுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நிறுவனப்படுத்தப்பட்ட விடயத்தில் நாங்கள் உங்களுக்கு
தெரியப்படுத்துவதாவது கிராமப் புறங்களில் சீட்டு பிடிப்பது என்ற
உத்தியோகபூர்வமற்ற நிலையில் நீங்கள் ஈடுபட்டு ஏமாற்றம் அடையும் தன்மைகள் காணப்படுகின்றன. ஆனால் அரச வங்கிகளான நாங்களும் இவ்வாறான சீட்டுப்பிடிக்கும் தன்மையை உத்தியோகபூர்வமான முறையில் இவ் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

நீங்கள் சிறுக சிறுக சேமிக்கும் பணத்தை நாங்கள் வட்டியுடன் பாதுகாப்பாக
திருப்பி வழங்குகின்றோம். இந்த சீட்டானது மாதாந்தம் ஆயிரம் தொடக்கம்
அதற்கு மேலதிகமாக நீங்கள் எங்கள் வங்கியில் வைப்பிலிட்டு வருடத்தில்
வட்டியுடன் மொத்தத் தொகையை பெறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். ஆகவே உத்தியோக பூர்வமற்ற சீட்டுகளைப் பிடித்து நீங்கள் ஏமாற்றம் அடைவதுடன் பணத்தை இழந்து நடு வீதியில் நிற்கும் அளவுக்கு உங்களை நீங்கள் ஏமாறாதீர்கள் என இவ்வாறு தெரிவித்தார்.
 







அங்கிகரிக்கப்பட்ட நிறுவனமாக விளங்கும் அரச வங்கியில் சேமிப்பை இடுங்கள்-மன்னார் மக்கள் வங்கி முகாமையாளர் பிரதீப் Reviewed by Author on March 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.