அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் தமிழர்களிடையே மத வேறுபாடுகள் களையப்பட வேண்டும்- முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழர்களிடையே இடம்பெற்ற மத வேறுபாடுகள் சம்பந்தமான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான புரிந்துணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லாவிடின் ஏனைய சமூகத்தினரின் ஊடுருவல்கள் அதிகரித்து விடும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் 06-03-2019  விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,.

எமது தமிழ் மக்கள் மத்தியிலே மதம், ஜாதி, பிரதேசவாதம் போன்ற வேறுபாடுகள் ஏற்படுமாயின் அது மாற்று சமூகத்தினருக்கே வாய்ப்பாகிவிடும். மன்னார் மாவட்டத்தில் இன்று தமிழர்களின் விகிதாசாரம் குறைந்து வருவதனை மாவட்ட செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களிலிருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் விகிதாசாரம் 2015ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 74 வீதமாக இருந்தவர்கள் இன்று 2018ம் ஆண்டு இறுதியில் தமிழர்களின் விகிதாசாரம் 60 வீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு எமது மக்களின் இருப்பு ஏனைய சமூகத்தினரின் குடியேற்றங்களினால் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறான நிலையில் எமது மக்கள் மத்தியில் வேறுபாடுகள் நிலவுமேயானால் அது ஏனைய சமூகத்தின் குடியேற்றங்களுக்கு வாய்ப்பாகிவிடும்.

அரசியல் ரீதியான செயல்பாடுகளின் ஊடாகவே கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற முறுகல்கள் ஏற்படுத்தப்பட்டன என பரவலாக பேசப்படுகின்றது. இவ்வாறன நிலைமை ஏற்பட்ட பொழுது மாவட்டத்தைச் சார்ந்த தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்விதமான முயற்சியினையும் மேற்கொள்ளவில்லை என்பது இதனூடாக தெரிகின்றது. இவர்கள் தங்களது வாக்கு வங்கிகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் தலையீட்டின் ஊடாக இப்பிரச்சினை சுமூகமாக கொண்டுவந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அதே நேரத்தில் இரு மதத்தைச் சார்ந்த மதத்தலைவர்கள் நேர்மையாக இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நாம் தமிழர் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக கைகோர்க்க வேண்டும் என்பது எனது அவாவாகும்.

வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் வறுமையில் அபிவிருத்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தருவாயில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. மத சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதே நேரத்தில் நாம் தமிழர்கள் என்ற உணர்வு இந்து, கிறிஸ்தவ தமிழர்களுக்கு ஏற்பட வேண்டும்.

அந்த உணர்வின் ஊடாகவே இப்பிரச்சினை சுமூகமாக முடிவிற்கு கொண்டு வந்து எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் எமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என இரு தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.


மன்னார் மாவட்டத்தில் தமிழர்களிடையே மத வேறுபாடுகள் களையப்பட வேண்டும்- முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன். Reviewed by Author on March 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.