அண்மைய செய்திகள்

recent
-

'மறப்போம் மண்ணிப்போம்' என பிரதமர் கூற முடியும்-மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தோடும் குடும்பங்களின் சங்கத் தலைவி ம.உதையச்சந்திரா-படம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் சார்பாக கிழக்கு மாகாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (19) காலை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அணைத்து தரப்பினரும் பூண ஆதரவு வழங்க வெண்டும் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்  தோடும் குடும்பங்களின் சங்கத் தலைவி  மனுவல் உதையச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (18) மாலை மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை தோடும் குடும்பங்களின்   சங்கத்தில் இடம் பெற்ற ஊடக சந்தியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.
 இம் மாதத்திற்குள் நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
காரணம் என்ன என்றால் 'மறப்போம் மண்ணிப்போம்' என்பதற்கு இடமே இல்லை. நாங்கள் கொடுத்தது எமது உறவுகளை.
 வீட்டில் இருந்தவர்களையும், எமது பிள்ளைகளையும், கடலுக்குச் சென்றவர்களையும் அவர்கள் பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

'மறப்போம் மண்ணிப்போம்' என்பதற்காக நாங்கள் ஆட்டு மாட்டை கொடுக்கவில்லை. எங்களிடம் 'மறப்போம் மண்ணிப்போம்' என்பதற்கு இடமே இல்லை.

பிரமதர் ரணில் விக்கிரம சிங்க கிளிநொச்சியில் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னிலையில் அதனை சொல்லி இருந்தால் அவர் கிளிநொச்சியை தாண்டி சென்று இருப்பாறோ தெரியவில்லை.

எனவே எக்காரணம் கொண்டும் கால அவகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது.
ஏற்கனவே இரு தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டும் இலங்கை அரசாங்கம் எமக்கு எதனையும் செய்யவில்லை.
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் இருக்கின்றதோ, இல்லையோ? ஆனால் தற்போது இருக்கின்ற உறவுகளை விடச் சொல்லியே கேட்கின்றோம்.

-அவர்கள் இல்லை என்றால் அவர்களை என்ன செய்துள்ளனர்.

ஏன்? எதற்காக எமது உறவுளை பிடித்துக்கொண்டு சென்றனர்.அவர்களை என்ன செய்துள்ளனர்.
அவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதனை நீதியுடன் கூற வேண்டும்.

இலங்கை அரசில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் ஐ.நாவை நம்பியுள்ளோம்.
ஆனால் ஐ.நாவிடம் இலங்கை மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரி அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள். எனவே ஐ.நா சபை இலங்கை அரசங்கத்திற்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாது.

எனவே இன்று செவ்வாய்க்கிழமை (19) கிழக்கு மாகாணத்தில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக முன்னெடுக்கப் படுகின்ற  போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு வாழ் மக்களும்,பொது அமைப்புக்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும். என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
'மறப்போம் மண்ணிப்போம்' என பிரதமர் கூற முடியும்-மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தோடும் குடும்பங்களின் சங்கத் தலைவி ம.உதையச்சந்திரா-படம் Reviewed by Author on March 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.