அண்மைய செய்திகள்

recent
-

அலுவாக்கரை.... மீனவர்களின்பிரச்சினைகளைப்பேசும் நாவல்.


அலுவாக்கரை.. மீனவர்களின்பிரச்சினைகளைப்பேசும் நாவல்.
கடலும்கரையும் சேரும் இடத்தைஅலைவாய்க்கரைஎன்றுதமிழில்
குறிப்பிடுவதை மீனவமக்கள்தமதுவட்டாரமொழிச்சொல்லாடலில்
அலுவாக்கரைஎன்றுகதைப்பதைதனதுநாவலுக்குதலைப்பாக்கிஇருக்கிறார்
எழுத்தாளர்எஸ.ஏ.உதயன். இது இவரது அச்சாக்கம் பெறும் எட்டாவது படைப்பு. கடந்த 15.02.2019 அன்று கொழும்பு மகாவலி மத்தியகலாசார நிலையமண்டபத்தில் கொடகே நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்தகையெழுத்துப்பிரதிகளுக்கானவிருதுவழங்கும் விழா வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழமையாக சிங்களப்படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படஏற்பாடு செய்யப்படும் இவ்விழாவில் இம்முறை தமிழ் எழுத்தாளரும் நாவலாசிரியருமான திரு.எஸ்.ஏ.உதயன்அவர்களுக்கும்அவரது “அலுவாக்கரை” நாவலுக்காக விருது வழங்கிய நிகழ்வு மன்னார் மாவட்ட மக்கள் பெருமைப்படவேண்டிய ஒன்றாகும்.

ஆசிரியரின் இந்த அலுவாக்கரை நாவல்அவரது எ ட்டாவது படைப்பாகும். அவரது 
  • லோமியா
  •  தெம்மாடுகள்
  • வாசாப்பு
  •  சொடுதா
  •  குண்டுசேர்
  • சங்குமுள்ளு
  • உ.பி83 என்றபடைப்புக்கள்அனைத்தும் விருதுகளை வென்றெடுத்த நாவல்களாக அமைந்திருந்தமை தமிழ்ப்படைப்புலகத்தையே பெருமையுடன் பார்க்கவைத்தது எனலாம்.
கடற்புரத்துக்கதைகளைஅழகாகவும்உயிர்ப்பாகவும்எழுதும்
எஸ்.ஏ.உதயன்கொஞ்சம்கூடஅந்தநெய்தல்வாசனைமாறாமல்
இந்தநாவலையும்ஈழத்துஇலக்கியப்பரப்பில்தவழவிட்டிருக்கிறார்.
ஈழத்துதமிழ் பேசும்மக்களின் கடற்சூழலியல்சார்ந்த வாழ்வியலை இலக்கிய ஆவணமாகவும் புனைவுப்பிரதிகளாகவும்மாற்றித்தந்தவர்களில் மன்னார்எஸ்.ஏ. உதயன்முக்கியமானராவார்.
இவரதுகதைகளில்உள்ளாடும்அரசியலும் பொருண்மியமும் பற்பல நியாயங்களைப்பேசுவதாக இருக்கும்.அந்தவகையில்இந்தஅலுவாக்கரை நாவல் சமகாலத்தில் நெருப்பாகப்பற்றியெறிந்து கொண்டிருக்கும் இந்திய மீன்பிடிப்படகுகளின்அத்துமீறலானகடல் நுழைவினால 
எமதுபிரதேசகுறிப்பாகமன்னார்க்கடற்கரையைசீவாதாரமாகக்கொண்ட
எமதுமீனவர்களுக்கு ஏற்படுத்தப்படும்பாதிப்பும்அதனால்ஏற்படும்துயரமும்
இந்தநாவலின்மூலம்வாசகர்களுக்குஉணர்த்தப்படுகிறது.
ஏறத்தாளமுப்பதுவருடங்களாக எமதுமீனவர்களால்கைக்கொள்ளப்படும்
இழுவைப்படகுத்தொழில் இந்தியப்படகுகளின்வருகையால்முடக்கப்பட்டு
இப்போது வாரத்தில் மூன்றுநாட்கள் தொழில்என்றும் இஆதன இழப்பு என்றும்/இறால்பாடுகுறைவென்றும். கடலுழக்கு என்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் அதன் எதிர்வினைகள் பற்றியும்பேசுகிறது.  நமது மண்ணில் போருக்குமுன்/போர்க்காலத்தில்/ போருக்குப்பின் என்ற மூன்று காலப்பரிமாணப்பரப்புக்களில் நிகழ்ந்த சம்பவக்கோவைகளை குலைத்து வக்கண்ணாடியாக நகர்த்தி இருப்பது கதாசிரியரின் நாவல் முதிர்ச்சியை துல்லியமாகப்பிரதிபலிக்கிறது. 

பெரும்பாலும்சாதாரணபேச்சு நடையில் வட்டாரவழக்குச்சொற்களைக்கொண்டு
கட்டமைக்கப்பட்டுள்ள
இந்தநாவலைவரிக்குவரிஆழ்ந்தரசனை
உணர்வுடன் கருத்துான்றிப்படிக்கவேண்டிய மௌனித்தநிபந்தனையை
அலுவாக்கரைஉருவாக்கியுள்ளமை
கவனிக்கத்தக்கது என நாவலுக்குஅணிந்துரை
எழுதியிருக்கும் ஆய்வாளர்எஸ். டேவிட்அவர்கள் விதந்துரைப்பதை நாம்கவனிக்கவேண்டும்.
ஊர்த்துறை மீனவர்கள் அவர்களின்படகுகளில் சென்றுஅத்துமீறிஅவர்களின்
கடல்பரப்புக்கள்நுழைந்த
இந்தியப்படகுகளை விரட்டிப்பிடித்துபடகுகளை தமது
ஊர்த்துறைக்கு கொண்டுவந்து கவனஈர்ப்புபோராட்டம் நடத்துகிறார்கள்.
அரசாங்கத்தின்உயர்
அதிகாரிகளையும்  இந்தியஉதவி ஹைமொமிசனரையும் ஊர்த்துறைக்கு வரவழைக்கிறார்கள். பிரஸ்மீடியாக்கள் என்று அந்த ஊரேபரபரப்பாகிறது.அதற்குள்
இந்திய  மீனவர்களோடும் அவர்களைப்பிடித்துவந்த
ஊர்காரர்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் பலவிதமான சூடான
உரையாடல் நடந்தபின்..நாவலில்
“நாங்க உங்ககடலுக்கு மீன்பிடிக்கவந்தது தவறுதான்.. எங்கள மன்னிச்சிடுங்க. நாங்கஇனிமே  இங்கிட்டு வரமாட்டோம்.”
அதை அவன்சொல்ல அந்தப்பிரச்சினையேதீர்ந்தமாதிரிசனம் ஊய்என்டு சந்தோசமாச்சத்தம்போடுது. கொமிசனரும்அதிகாரிகளும்போய்ட்டாங்க. ஊர்ச்சனம் இந்தியாத்தொழிலாளிகளைசந்தோசமா அனுப்பிவைச்சுது. இனி இந்தியாப்போட்டுத்தொல்லை இந்தக்கடலில இருக்காது. இந்தஊர்ஆட்கள் இந்தியாப்போட்டுக்களைப்பிடிச்சுவைச்சவிசயம் அடுத்தநாள் பேப்பரில போட்டோபோட்டுவந்துது.ஊர்ச்சனம்அதப்பாத்துசந்தோசப்படுது. அதுகளுக்கு ஒருநம்பிக்கை. அடுத்தநாளே அந்தநம்பிக்கை உடைஞ்சுபோச்சு.வழமையவிடநுாறுபோட்டுகூடவந்ததாக தொழிலாளிக சொன்னபோது வெறுத்துப்போச்சு.
மீன்வளப்பொருண்மியத்தை ஆதாரமாக்கொண்டுவாழுகின்ற உழைக்கும்மக்களின் வாழ்க்ககையில் சாதாரணமாக தினம்தொறும்கடந்தபோகின்ற அதிகம்கவனத்தில் கொள்ளப்படாதசம்பவங்களைகதையாடல்களை ஆசிரியர்தனதுஎழுத்தக்கோர்வக்கள்உள்ளீர்ப்புச்செய்கிறார்.
அரசாங்கம்எரிபொருளிலஇருந்து சீமேந்துவரைக்கும் இயக்கத்துக்குப்போகக்கூடாதென்டுதடைசெய்துவைச்சிருந்தபோது இந்தஊர்த்துறையில இருந்துதான் கள்ளத்தனமாசாமான்கடத்தினாங்க.இங்கஇந்தஊர்த்துறையில ஏத்துறசாமான் ஒருமணித்தியாலத்திலஅங்க விடத்தல்தீவுக்குப்போய்ச்சேந்திரும்.
“இண்டைக்குவேணாம் அல்பட்டு..நேவிக்காரன்பேய்மாதிநிக்கான்.”
“அப்பிடிப்பாக்க ஏலாது.. ஒவ்வொருநாளும் நாமநேவியோட மல்லுக்கட்டுறோம்தானேயப்பா. வெளிக்கிடுங்க.. சாந்தரூபியக்காவசென்ரிக்குப்போடுவம்..அவவிட சிக்னல்தான்சரி..”
இந்தமீனவக்கிராமத்தின்போராட்டப்பங்களிப்பை புலிகள்பல்வேறுவிதமாகப்பயன்படுத்திக்கொண்டமையையும்அதனால் சாகமாகஎதிர்கொண்டஉபத்திரவத்தையும் யதார்த்தமாக வாசகர்களுக்குப்பந்திவைக்கிறார்ஆசிரியர். 
ஒருதடவையல்ல மூன்றுதடவைகள் கடல்கடந்து இந்தியாவுக்கு அகதிகளாகச்செல்ல நேரிட்டபோது அவர்கள் எதிர்கொண்டதுயர அனுபவத்தை ஆசிரியர்விபரிக்கும்இடம்அலாதியானது.
சமுத்திரத்தின் மழழைக்காடுகள் என்றுகடற்சூழலியர்களால் வருணிக்கப்படும் கடலடியின்பவளப்பாறைகளும்பிளான்தன்களும் மீன்பிடியாளர்களால்அழித்தொழிக்கப்படுகின்றன. குறிப்பாக இந்திய இழுவைப்படகுகள் நமது கடலடி உயிர்களின் உற்பத்திமையங்களின் முதுகில்தினமும் எற்படுத்தும்கி றல்களும்காயங்களும் அழவுகளும்சாதாரணமானவையல்ல அவை எமது அடுத்ததலை முறைகளின்பொருண்மியத்தை இல்லாதாக்கிவிடுகின்ற அபாயசமிக்கைகள்என்பதைச்சொல்லும்விதமாகவே இந்த நாவலை எழுதுவதாகதனது முன்னுரையில்ஆசிரியர்எழுதுகிறார். 

பாஸ் மண்டபத்திலகப்பித்தான்குதிரையிடபிடரிமயிரப்பிடிச்சக்கின்டு
ஏறிக்குதிக்கிறமாதிஅணியத்திலஒருகாலத்துாக்கிவைச்சுமறுகால
பலகையிலமிதிச்சுக்கின்டுநிக்கிறான்
செல்வன். அவனிடமிதிப்புக்ககடல் அடங்குத என்ட நினைப்பு அவனுக்கு..என்றுஆரம்பிக்கின்ற இந்த நாவல் விறுவிறுவென்றுவேகம்காட்டிநகருகின்றது.. போகிற போக்கில்அதுதொட்டுச்செல்லும் நிகழ்வுகளும் சம்பவங்களும் கதைக்களத்தின்மீனவர்கள் எதிர்கொள்ளும்சவால்கள் நெருக்கடிகள் பிரச்சினைகள்உயிராபத்துக்கள்ஏமாற்றங்கள்வர்க்க
முரண்பாடுகள் தனிமனிதஅபிலாசைகள்தொழில்முறைமாற்றங்களால்
சமுதாயத்தளத்தில் ஊடுருவியுள்ளதவிர்க்கமுடியாதமாற்றங்கள்
போன்றவற்றைதருக்கரீ தியாகவும்யதார்த்தமாகவும்கூர்மையாகவும்
அலசிக்கொண்டுதீவிரம்காட்டிச்செல்லும்நாவல்இறுதியில்அந்தமக்களின்
இயலாமையைஒப்புவிப்பதுபோல..
றோலர்த்தொழில் இந்தக்கடலுக்கு நல்லதா கெட்டதா ?
முப்பதுவருசமா இந்த ஊர்த்துறைமக்களுக்கு செல்வாக்காக இருந்த இந்தத்தொழிலைஇப்படிக்கைவிட்டிரலாமா..?
கேள்விகளும் நியாயங்களும் பலபக்கத்திலும் கேட்டபடிஇருக்க மெதுவாக அசைந்தபடிகிடந்ததுஅலுவாக்கரை.என்றுமுடியும்போதுநெஞ்சுகனக்கிறது.

எழுத்தாளரின்நண்பரும்சமூகஆர்வலருமானஅமரர்கியுபட்பறுனாந்துவுக்குசமர்ப்பணம்
செய்யப்பட்டஇந்தநாவல்கொடகேநிறுவனத்தின்வெளியீடாக
வெளிவந்திருக்கிறது.
216பக்கங்கள்
விலை-700.ரூபா



அலுவாக்கரை.... மீனவர்களின்பிரச்சினைகளைப்பேசும் நாவல். Reviewed by Author on March 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.