அண்மைய செய்திகள்

recent
-

காபன் பரிசோதனைக்கு அனுப்பப்ட்ட மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் கைமாறியதுக்கான வாய்ப்புக்கள் இல்லை. சட்டத்தரணி S.புராதினி

மன்னார் புதைகுழியிலிருந்து காபன் பரிசோதனைக்காக அமெரிக்க புளோரிடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட எலும்புக்கூடுகள் முக்கியஸ்தர்கள் முன்னிலையிலே எடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ஆகவே இதில் எவரும் சந்தேகப்படும் அளவுக்கு இடமில்லையென காணாமல் ஆக்கப்பட்டடோர் அலுவலக மன்னார் இணைப்பாளர் சட்டத்தரனி செல்வி எஸ்.புராதினி இவ்வாறு தெரிவித்தார்.

 வெள்ளிக்கிழமை (22.03.2019) மன்னாரிற்கு விஜயம் செய்த காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு சாலிய பீரிஸ் தலைமையிலான ஆணையாளர்கள் கணபதிப்பிள்ளை வேந்தன், மீராக் ரஹிம் ஆகியோர் மன்னார் மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உதவித்திட்டங்கள் மற்றம் மன்னார் புதை குழி சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இவ் கலந்துரையாடலில் மன்னார் புதைகுழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட
எலும்புக்கூடகளின் மாதிரிகளை அமெரிக்க புளோரிடாவுக்கு காபன்
பிரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதில் சிவில் அமைப்புக்களாகிய
தங்களுக்கு பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தங்கள் கருத்துக்களை
இவ் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டபோது

இதற்கு பதிலளித்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக மன்னார் மாவட்ட
இணைப்பாளர் சட்டத்தரனி செல்வி புராதினி சிவலிங்கம் இவ் கூட்டத்தில்
தெரிவிக்கையில் மன்னார் புதைகுழியிலிருந்து காபன் பரிசோதனைக்காக
அனுப்புவதற்காக எடுக்கப்பட்ட மாதிரி எலும்புக்கூடுகள் மன்னார் நீதவான்
முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஐராகி வரும் சட்டத்தரனிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு பிரதிநிதிகள் முன்னிலையிலே இவைகள் எடுக்கப்பட்டு எங்களுக்கு முன்பாகவே உலர வைத்து எங்களுக்கு முன்பாகவே அவற்றை பார்சல் செய்து நீதவானின் மேற்பார்வையிலே அவைகள் பாதுகாப்புக்காக நீதிமன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நீங்கள் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். அதாவது ஏன் ஆறு மாதிரி
எலும்புக்கூடுகளை மாத்திரம் எடுத்துச் செல்லப்பட்டது? சிறுவர்களின்
எலும்புக்கூடுகள் எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கேள்விகளும் இங்கு
தொடுக்கப்பட்டது.

அதாவது புதைகுழியின் ஆறு மண் படைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரி
எலும்புக்கூடுகளே எடுக்கப்பட்டதாகவும், இந்த புதைகுழியானது முன்னைய
நீதிபதி அலெக்ஸ்ராஜா முன்னிலையிலேயே இவ் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடம்பெற்றதாகவும் பின் நீதிபதி பிரபாகரன் பின் தொடர்ந்து இன்றைய நீதிபதி சரவணராஜா ஆகியோர் முன்னிலையிலே இவ் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

ஆனால் முன்னைய நீதிபதிகள் முன்னிலையில் அகழ்வு செய்யப்பட்ட மனித
எச்சங்கள் காபன் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. காரணம்
பின்னுக்கு ஒரு கேள்வி எழுப்பப்படும்போது பதிலளிக்க வேண்டி வந்தால் கண்
முன்னுக்கு நடக்கும் நிகழ்வாக இருக்க வேண்டும் என எண்ணப்பாட்டில்
கண்ணுக்கு முன்னாலே எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதுவும் சம்பந்தப்பட்டவர்களின் மேற்பார்வையிலேயே இவ் மாதிரி
எலும்புக்கூடுகள் அமெரிக்க புளோரீடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது
என்பதும் யாவரும் அறிந்த விடயம்.

ஆகவே காபன் பரிசோதனைக்காக புளோரீடா பரிசோதனை நிலையம் வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்ட மாதிரி எலும்புக்கூடுகளில் கைமாறப்பட்டதோ என்பதில் சந்தேகம்
ஏற்பட வாய்ப்பு இல்லையென காணாமல் ஆக்கப்பட்டடோர் அலுவலக மன்னார் இணைப்பாளர் சட்டத்தரணி செல்வி எஸ்.புராதினி இவ்வாறு தெரிவித்தார்.

காபன் பரிசோதனைக்கு அனுப்பப்ட்ட மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் கைமாறியதுக்கான வாய்ப்புக்கள் இல்லை. சட்டத்தரணி S.புராதினி Reviewed by Author on March 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.