அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வர வன்முறை; நீதிமன்றின் அதிரடி உத்தரவை-மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர்!


திருக்கேதீஸ்வர வன்முறை சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை அமுல்படுத்த மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பின்னடிப்பதாக இலங்கை இந்து சம்மேளன தலைவர் நாரா.டி.அருண்காந்த் அவர்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெய சுந்தர அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளதாக இலங்கை இந்து சம்மேளனத்தினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய நிர்வாகத்தினர் நிர்மாணித்த அலங்கார வளைவு சில மதத் தீவிரவாதிகளால் அடித்து நொருக்கப்பட்டது தொடர்பாக மன்னார் மாவட்ட நீதிமன்றம் அடுத்தடுத்த அமர்வுகளில் இரண்டு வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியிருந்தது.

அதில் முதலாவது அமர்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் மீண்டும் அலங்கார வளைவை நிர்மாணிக்கவும் நான்கு நாட்களுக்குள் அவற்றை மீண்டும் அகற்றிவிடவும் உத்தரவிட்டது.

சட்டத்தையும் தர்மத்தையும் மதிக்கும் இந்துக்கள் நீதவானின் உத்தரவை சிரமேற்கொண்டு நான்கு நாட்கள் முடிந்த உடனேயே வளைவை அகற்றிவிட்டனர். இதனை தொடர்ந்து நீதிமன்று இவ்வன்முறை தொடர்பாக விசாரித்தது. இவ்விசாரனணயின்போது திருக்கேதீஸ்வரம் ஆலய நிர்வாகத்தினர் சம்பவ தினத்தன்று நடைபெற்ற வன்முறைகள் அடங்கிய கானொளியை நீதிமன்றுக்கு வழங்கி அக்கானொளியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரினர்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த வன்முறையாளர்கள் தரப்பில் ஆஜரான சட்டதரணி நீதிமன்றுக்கு அதனை நிராகரிப்பதற்கான பொருத்தமான காரணங்களை கூறாமல் வெறுமனே எதிர்ப்பை மட்டுமே பதிவுசெய்தவண்ணமிருந்தார்.

குறித்த கானொளி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால் அக்கானொளியில் மிகத்தெளிவாக அடையாளம் காணப்பட்ட பங்குத்தந்தையும் கைதுசெய்யப்படலாம் எனும் காரணத்தினாலேயே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மேலும் துரதிஸ்டவசமாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகசபை சார்பில் ஆஜரான சட்டதரணி தமது ஆட்சேபனையை தெரிவிக்காமல் விட்டதும் உண்மை வெளிக்கொண்டுவரப்படவேண்டுமானால் குறித்த கானொளியை நீதிமன்றம் உத்தியோகபூர்வமாகபெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தத்தவறியிருந்தார்.

எனினும் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதியவர்கள் குறித்த கானொளியை அடிப்படையாகக்கொண்டு பொலிசார் சந்தேக நபர்களை விசாரித்து கைதுசெய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.

இவ்வுத்தரவை அமுல்படுத்தவேண்டிய முழுப்பொறுப்பும் மன்னார் பொலிஸ் தலைமையகத்திற்கு வழங்கப்பட்டிருந்தும் இதுவரை மன்னார் நீதவானின் உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை. அதாவது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, சந்தேக நபர்களும் மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தானோ கைது நடவடிக்கைகள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகின்றது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்து வருகின்றது.

ஆகவே மேற்கூறிய சம்பவங்களையும் வியாக்கியானங்களையும் கருத்திற்கொண்டு சம்மத்தப்பட்டவர்கள் விரைவில் நடவடிக்கைகளை எடுக்க மன்னார் பொலிஸ் தலைமையகத்திற்கு உத்தரவிடுமாறு வேண்டி இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் அவர்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெய சுந்தர அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்தார். இதனை ஏற்ற பொலிஸ் மா அதிபர் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார் என குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகப் பிரிவு - இந்து சம்மேளனம், இலங்கை.

திருக்கேதீஸ்வர வன்முறை; நீதிமன்றின் அதிரடி உத்தரவை-மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர்! Reviewed by Author on March 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.