அண்மைய செய்திகள்

recent
-

பிரான்ஸ் தேவாலய தீ விபத்தில் 2 லட்சம் தேனீக்கள் உயிர் பிழைத்த அதிசயம்: ஆச்சரியத்தில் பாரிஸ் மக்கள் -


பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த தீ விபத்தில் அதன் மேற்கூரையில் வசித்த 2 லட்சம் தேனீக்கள் தீயில் சிதைந்ததாக கருதப்பட்ட நிலையில் அவை பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

பாரிஸ் நகரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய 850 வருட பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் கடந்த 15ஆம் திகதி தீவிபத்தில் சிக்கி சிதைந்து போனது.

இதை சீரமைக்க ஐந்து ஆண்டுகள் ஆகும் என நாட்டின் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சோக நிகழ்விலும் தேவாலயம் தொடர்பாக அதிசயம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது, தேவாலயத்தின் மேற்கூரை மீது வசிக்கும் சுமார் 2,00,000 தேனீகள், தீயில் சிக்கி சிதைந்துவிட்டதாகக் கருதப்பட்டது.
ஆனால், அவை பத்திரமாக இருப்பதாக தேனீக்களைப் பராமரிப்பவர் தெரிவித்துள்ளார்.

இது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தீ விபத்து நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு அவை ரீங்காரமிட்டு வெளியே வந்ததாம்.
தேனீக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அந்நாட்டு அரசு 2013-ம் ஆண்டு தேவாலயத்தின் மேற்கூரையில் தேனீக்களை வளர்க்க முடிவுசெய்ததோடு அதற்காக கீண்ட் என்பவரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தேவாலய தீ விபத்தில் 2 லட்சம் தேனீக்கள் உயிர் பிழைத்த அதிசயம்: ஆச்சரியத்தில் பாரிஸ் மக்கள் - Reviewed by Author on April 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.