அண்மைய செய்திகள்

recent
-

தீயில் சிதைந்த பழம்பெரும் பாரிஸ் தேவாலயம்: இதுவரை குவிந்த நிதி எவ்வளவு தெரியுமா...


பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாட்ரி டாம் பேராலயம் தீயில் சிதைந்த நிலையில், அதை புனரமைக்க பெரும் செல்வந்தர்கள் முன்வந்துள்ளனர்.

குறித்த பேராலயம் தீக்கிரையான தகவல் வெளியானதும், ஜனாதிபதி மேக்ரான் உலக நாடுகளிடம் முக்கியமான கோரிக்கை வைத்தார்.
அதில், சிதைந்த தேவாலயத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் கட்டி எழுப்புவோம் எனவும், அதற்கான நிதியுதவியை பெற உலகமெங்கிலும் உள்ள மக்களிடம் கோரிக்கை முன்வைப்போம் என்றார்.

இந்த நிலையில் பிரான்ஸின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான Bernard Arnault தமது சார்பாக 200 மில்லியன் யூரோ வழங்குவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக பிரபல ஹாலிவுட் நடிகையான Salma Hayek-ன் கணவரும் பிரான்சின் பிரபல தொழிலதிபருமான Francois-Henri Pinault தமது சார்பாக 100 மில்லியன் யூரோ நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே Bernard Arnault-ன் LVMH குழுமத்தில் உள்ள சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை பேராலய பணிக்காக ஈடுபடுத்தவும் நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும், Ile-de-France பிராந்தியத்தின் தலைவர் Valerie Pecresse பேராலய பணிக்காக 10 மில்லியன் யூரோ நிதியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
பழம்பெரும் தேவாலயத்தை மீண்டும் அதே பொலிவுடன் கட்டி எழுப்புதல் என்பது மிகுந்த சிரமமான ஒன்று, இதனால் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிதி திரட்டும் திட்டத்தை வகுத்து வருவதாக Valerie Pecresse தெரிவித்துள்ளார்.

பாரிஸ் மேயர் Anne Hidalgo தெரிவிக்கயில், நன்கொடையாளர்களின் சர்வதேச மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மூலம் நிதி திரட்டப்படும் என்றார்.
தீவிபத்து தொடர்பில் முதன் முறையாக பேசிய ஜனாதிபதி மேகரன், மிகவும் மோசமான கட்டத்தை தாண்டியுள்ளோம், துரித நடவடிக்கையால் இரு கோபுரங்களை மீட்டுள்ளோம்.
ஆனால் அடுத்த சில மணித்துளிகள் மிகவும் கடினமானதாக அமையும் என்பது மறுக்கமுடியாத ஒன்று என தெரிவித்திருந்தார்.
மேலும் இதுவரை சேத மதிப்பு தொடர்பில் ஆய்வு ஏதும் மேற்கொள்ளவில்லை எனவும், ஆனால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் கண்டிப்பாக நாம் குறித்த பேராலயத்தை கட்டி எழுப்புவோம் என்றார்.

850 ஆண்டு பழமையான இந்த பேராலயம் பாரிஸ் நகரின் பாரம்பரியாகச் சின்னமாக திகழ்கிறது.
ஐரோப்பிய கட்டிட கலைக்கு சிறந்த எடுக்காட்டாக விளங்கும் இத்தேவாலயம் 69 மீட்டர் உயரமுள்ள இரண்டு கோபுரங்களை கொண்டுள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில், புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் தேவாலயத்தின் மேற்கூரைப் பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதும் பற்றியது. இதில் தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.


தீயில் சிதைந்த பழம்பெரும் பாரிஸ் தேவாலயம்: இதுவரை குவிந்த நிதி எவ்வளவு தெரியுமா... Reviewed by Author on April 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.