அண்மைய செய்திகள்

recent
-

அவனைச் சுமப்பது வலிக்கவில்லை! 6 ஆண்டுகளாக நண்பனைத் தூக்கிச் செல்லும் சிறுவன் -


சீனாவில் சிறுவன் ஒருவன் தமது மாற்றுத்திறனாளி நண்பனை கடந்த 6 ஆண்டுகளாக தோளில் சுமந்து பாடசாலைக்கு அழைத்துச் செல்வது அங்குள்ள ஊடகங்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மீஷன் நகரத்தில் ஸூ பிங்யாங் என்ற 12 வயதுச் சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான்.
அதே பகுதியில் ஸாங் ஸீ என்னும் மாற்றுத் திறனாளி சிறுவனும் வசித்து வருகிறான். இருவரும் சிறிய வயது முதலே நண்பர்கள்.
மட்டுமின்றி மாற்றுத் திறனாளி சிறுவனான ஸாங் ஸீயை கடந்த ஆறு வருடங்களாக ஸீ பிங்யாங் தன் தோளில் சுமந்து பாடசாலைக்கு அழைத்துச் செல்கிறான்.

பாடசாலையில் வகுப்பறை, சாப்பிடும் இடம், கழிவறை என எங்கு செல்ல வேண்டும் என்றாலும் மற்றவரின் உதவியில்லாமல் ஸாங் ஸீயால் செல்ல முடியாது. கடந்த ஆறு வருடங்களாக பிங்யாங் தான் ஸாங் ஸீயை பாடசாலை வளாகம் முழுவதும் சுமந்து செல்கிறான்.
இந்த அற்புதமான நட்பைக் குறித்து சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் நண்பர்கள் இருவரும் பிரமாதமாக பதிலளித்துள்ளனர். அவனைச் தூக்கிக் கொண்டு நடப்பதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்.
நான் 40 கிலோ, என் நண்பன் 25 கிலோ இருக்கிறான், என் நண்பனின் ஊன்று கோலாக இருப்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளான் ஸூ பிங்யாங்.

ஸாங் ஸீ கூறுகையில், எனக்கு அரிய வகை தசை நோய் வந்ததால் 4 வயதிலிருந்தே நடக்க முடியாது. இந்தப் பாடசாலையில் சேர்ந்ததிலிருந்தே என் நண்பன்தான் எனக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருக்கிறான்.
சாப்பிடுவதற்குச் செல்வது, வகுப்பறைக்குச் செல்வது, கழிவறைக்குச் செல்வது, தண்ணீர் நிரப்பச் செல்வது என எங்குப் போனாலும் என் நண்பன்தான் கூட்டிச் செல்வான்.
என் கூடவே இருந்து பேசிக் கொண்டே இருப்பான். அவன் இல்லையென்றால் நான் இல்லை என்று நன்றியுணர்வோடு பேசியிருக்கிறான்.
அவனைச் சுமப்பது வலிக்கவில்லை! 6 ஆண்டுகளாக நண்பனைத் தூக்கிச் செல்லும் சிறுவன் - Reviewed by Author on April 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.