அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளங்குள மற்றும் சுண்ணாவில் மரமுந்திரிகை காணி தொடர்பாக நடந்தது என்ன ?

வெள்ளங்குள மற்றும் சுண்ணாவில் மரமுந்திரிகை காணி தொடர்பானது
மேற்படி மரமுந்திரிகைகாணிகளை  மரமுந்திரகை கூட்டுதாபனத்திற்கு கையளிப்பது தொடர்பான கலந்துரையாடல் பத்திரமுல்லவில் குறித்த அமைச்சரின் தலைமையில் குறித்த அமைச்சில் 18/04/2019 ம் திகதி நடைபெற்றது சுண்ணாவில் மரமுந்திரகை காணிவிடயம் சார்பாக பூநகரி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் செந்தூரன்  மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு திருலிங்க நாதனும், வெள்ளங்குள மரமுந்திரகை காணிதொடர்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு கேதிஸ்வரனும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு குணபாலனும் கலந்து கொண்டனர்

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் ஜெயபுரம் வடக்கு கிராம  அலுவலர் பிரிவில் சுண்ணாவில் உள்ள மரமுந்திரகை காணியனது  1978ம் ஆண்டு வர்தகமானியில் மரமுந்திரகை கூட்டுதாபனத்திற்கு வழங்கப்பட்டமையால் இக் காணியனது மீளவும் மரமுந்திரகை கூட்டு தாபனத்திற்கு வழங்குவதற்கு முடிவு எடுக்க பட்டது

  மேலும்  மாந்தை  மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளங்குளம்  இடத்தில் உள்ள மரமுந்திரகை காணியனது விடுதலை புலிகளால் உருவாக்கப்படடது என்றும் அதனை இராணுவம் தற்பொழுது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மரமுந்திரகை கூட்டு தாபனத்திற்கு வழங்குவதற்கு கையளிக்குமாறும் மரமுந்திரகை கூட்டு தாபனத்தின் பணிப்பாளரால் கோரிக்கை விடப்பட்டது ,  இதன்பொழுது குறித்த காணிக்கான அதிகாரம் தனக்கு உரியது என்றும் அண்ணளவாக 100 arc காணிமட்டுமே உள்ளது ஒன்றும் இக்காணிகள் யாவும் இந்தியாவில் இருந்து நாடுதிருமபும் 150 000 குடும்பங்களுக்கு வழங்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார் மேலும் மன்னார் மாவட்டத்தில் பல காணிகள் வனவள திணைகளம் மற்றும் வனஜீவராசிகள் திணைகளத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மன்னாரை பூர்விகமாக கொண்ட மக்கள் பலர் காணி அற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்

இதன் பொழுது அங்கு பிரசன்னமாகி இருந்த இராணுவ தளபதி 200 arc மரமுந்திரகை காணி உள்ளது என உண்மை மாறன தகவலை வெளியிட்டுள்ளார் அதனை மறுக்க பிரதேச செயலாளர் காணிவிடயத்தில்  தலையிட இராணுவ தளபதிக்கு அதிகாரம் இல்லை எனபதனையும் எடுத்துரைத்தார் மேலும் காணியின் அளவை உறுதிபடுத்த மரமுந்திரகை கூட்டு தாபன அதிகாரிகள் மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர் மற்றும் இராணுவமும் இணைந்து களப்பரிசோதனை20/04/2019 அனறு செய்வதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 இதன்படி குறித்த தினத்தில் கள ஆய்வு செய்யபட்டு பிரதேச செயலாளரின் கூற்றுப்படி காணி மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்துக்கு வழக்க முடியா என்று  உறுதி படுத்தப்பட்டது

மேலும் 1992 ம் ஆண்டின் 58 ம் இலக்க அதிகார பரவலாக்கல் சட்டத்தின் கீழ் அரசகாணிகள் தொடர்பான நிர்வாகம் பிரதேச செயலாளருக்கு வழங்கபட்ட பொழுதும் அரச திணைக்களங்கு காணிவழங்கும் பொழுது மாவடட காணி பயன்பாட்டுக்கு குழு வின் அனுமதி மற்றும் 13ம் திருத்த சட்டத்தின் கீழ் மாகாண காணி ஆணையாளரின் அனுமதி பெறப்படல் வேண்டும்



வெள்ளங்குள மற்றும் சுண்ணாவில் மரமுந்திரிகை காணி தொடர்பாக நடந்தது என்ன ? Reviewed by Admin on April 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.