அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்களுக்கு ஓரு அறிவித்தல்...........

மன்னார் மக்களுகு ஓரு அறிவித்தல்........
தற்போது ஏற்பட்டுள்ள  அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பாகங்கலிலும் பாரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று  பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம்  உள்ளது இன்னும் முடிவுக்கு வரவில்லை இது வரை 08 இடங்களில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு 09 வெடிப்பு சம்பவமும் நேற்று இடம்பெற்றுள்ளது. உயிர் இழப்புகளின் எண்ணிக்கையும் 290 ஆக அதிகரித்துள்ளது காயங்களுடன் 500ற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.
 பல பாகங்களில் இருந்தும் வெடிபொருட்கள் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு வருகின்றது.
கொழும்பில் மட்டும் 38 சந்தேகத்திற்குரியவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்...
யாழ்ப்பாணம்,வவுனியா,திருகோண மலை மாவட்டங்களில் சந்தேகத்திற்குரியவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்...


 கொடூர சிந்தனையுடன் திரியும் சதிகாரர்களின் இலக்காக மதஸ்தலங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகையால் மக்களாகிய நாம் விழிப்பாய் இருக்கவேண்டும்.
எப்படி.....
  • களியாட்டங்களை தவிர்ப்போம்.
  • கூட்டமாக சேர்வதையும் கூடுவதையும் தவிர்ப்போம்.
  • சந்தேகத்திற்குரிய நபர்களினை கண்டவுடன் பொலிசில் முறையிடுங்கள்
  • மதத்தலங்களுக்கும்செல்வதையும்  அத்தோடு புதிய சந்தேகத்திற்குரியவர்கள் பொதிகளுடன் ஆலயங்களுக்கு சென்றால்
  • ஆலயங்கள் இராணுவ மற்றும் பொலிசின் பாதுகாப்பில் இருந்தாலும் சூத்திரதாரிகள் மட்டில் நாம் விழிப்பாய் இருப்போம்...
  • சந்தேகத்திற்குரிய பொதிகள் பார்சல்கள் பைகள் ஏனையவை
  • உங்களின் வாகனங்கள் மோட்டார்சைக்கிள்கள் அவதானமாய் இருங்கள்.
 மன்னாரின் உள்ள முக்கியமான இடங்கள் வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதோடு விடுமுறையில் உள்ள பாடசாலைகள்  சந்தைகள் பெரும்கடைகள் பரிசோதனைகளையும் மேற்கொள்வது  நலம்.
 நாட்டில் இடம் பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் மக்கள் அச்சத்துடனும் விழிர்ப்புணர்வுடனும் காணப்பட்ட நிலையில....இருக்கின்றனர்.

முடிந்த வரை பெரும் நாசகாரிய செயல்கள் நடப்பதினை ஒன்றுசேர்ந்து தவிர்ப்போம்..........தடுப்போம்.
இதுவரை இறந்த எம் உறவுகளுக்காய்.....மனதினில்...அவர்களின் ஆத்ம சாந்திக்காய்...,

மன்னார் மக்களுக்கு ஓரு அறிவித்தல்........... Reviewed by Author on April 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.