அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முப்படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் ஆயர் தலைமையில் இடம் பெற்ற விசேட திருப்பலி-படங்கள்

நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிர் நீத்தவர்களுக்காகவும், நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன் கிழமை 24-04-2019 காலை 10 மணியளவில் விசேட திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்ப்பு பெரு விழா திருப்பலிகள் இடம் பெற்ற போது நாட்டில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றது.

குறித்த சம்பவத்தின் போது சுமார் 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதோடு, பல நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் குறிப்பாக நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை  தலைமையில்   திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

குறித்த திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டு திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.


திருப்பலியின் போது அருட்தந்தையர்கள்,அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் கையில் மெழுகுவர்த்தியை ஒளிரச் செய்து திருப்பலியில் ஈடுபட்டதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சந்தியடையவும்,காயப்பட்டவர்கள் குணமடையவும் திருப்பலி விசேட விதமாக ஒப்புக்கொண்டுக்கப்பட்டது.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் குறித்த திருப்பலி இடம் பெற்ற போது பொலிஸார்,இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் ஆகியேரின் விசேட பாதுகாப்பினை வழங்கி இருந்தனர்.

இதன் போது திருப்பலி நேரத்தில் ஆலயத்திற்குள் செல்ல மகக்ளுக்கு படையினர் அனுமதியை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




















மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முப்படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் ஆயர் தலைமையில் இடம் பெற்ற விசேட திருப்பலி-படங்கள் Reviewed by Author on April 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.