அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-கடும் வாத பிரதி வாதங்கள் மத்தியில் கிடைத்த தமிழ் மக்களின் சொத்து

கடந்த மாதம் ஜனாதிபதியின் பணிப்பில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனால் முன்வைக்கப்பட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வெள்ளாங்குளம் பண்ணையானது 500 ஏக்கர்  இராணுவத்தின் வசம் இருந்து விடுவிக்கப்பட்டது

குறித்த வெள்ளாங்குள பண்ணையானது யுத்ததிற்கு முன்னர் விடுதலை புலிகளினால் பல ஆயிரக்கணக்கான கயூ மரங்கள் மற்றும் பல்வேறு பயன் தரும் மரங்கள் நாட்டப்பட்டு பராமரிக்கப்பட்ட நிலமாகும்

யுத்த காலப்பகுதியில் குறித்த காணியானது இராணுவத்தினரால் கப்பற்றப்பட்டு அங்கே உள்ள வளங்கள் மரங்கள் என அனைத்தின் பயன்களும் இராணுவத்தினரால் அனுபவிக்கப்பட்டதுடன் பல ஏக்கர் காணிகளில் விவசாய நடவடிக்கைகளியும் மேற்கொண்டு இருந்தனர்

இந்த நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதனின் வேண்டுகோளிற்கு இனங்க குறித்த காணியில் 265 ஏக்கர் பிரதேச செயலகத்திற்கு என விடுவிக்கப்பட்ட போதிலும் சில காரணங்களை மையப்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் குறித்த 265 ஏக்கர் காணிகளையும் இலங்கை கஜூ கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கில் இலங்கை கஜூ கூட்டுதாபன தவிசாளர் உட்பட்ட குழுவினர் குறித்த பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில்

பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் மற்றும் பிரதேச செயலாளரின் தலையீடு காரணமகாக குறித்த காணியை கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது

குறித்த பகுதியில் கயூ மரங்கள் அதிகமாக காணப்படுகின்றமையினால் இக்காணிகளை கஜூ கூட்டுத்தாபனத்தின் கொண்டு வந்து மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஆய்வு கூடங்கள் அமைத்து செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்த முடியும் என கஜூ கூட்டுதாபன தலைவரால் தெரிவிக்கப்பட போதும்

எமக்கு சொந்தமான நிலத்தில் எம்மால் கூழியாட்களாக வேலை செய்ய முடியாது எனவும் அருகில் உள்ள வன வள திணைக்களத்துக்கு என விடுவிக்கப்பட்ட காணிகளிலும் கயூ மரங்கள் காணப்படுகின்றது அங்கே உங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் ஆனால் இந்த 265 ஏக்கர் நிலமும் யுத்ததில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காகவும் முன்னால் போராளிகளுக்கும் வழங்குவதற்கும் என ஒதுக்கப்பட்டு பெயர் பட்டியலும் தாயாரிக்கப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து எதுவும் செய்ய முடியாத நிலையில் தாங்கள் சம்மந்தபட்ட அமைச்சருடன் கதைத்து முடிவெடுத்த பின்னர் இறுதி தீர்மனம் தொடர்பாக தெரிவிப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்

அதே நேரத்தில் குறித்த சந்திப்புக்கு என வணவள திணைக்கள தலைமை அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் வருகை தரவில்லை என்பது குறிப்பிடதக்கது.








மன்னார்-கடும் வாத பிரதி வாதங்கள் மத்தியில் கிடைத்த தமிழ் மக்களின் சொத்து Reviewed by Author on April 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.