அண்மைய செய்திகள்

recent
-

திரில் வெற்றிபெற்ற கொல்கத்தா!


கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 17வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அதிரடி காட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.


பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கோலி (84) மற்றும் டி வில்லியர்ஸ் (63) ரன்கள் எடுத்தனர்.
இமாலய இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் கிறிஸ் லின் (43), உத்தப்பா (33), நிதிஸ் ரானா (37) ஆகியோர் அணிக்கு தேவையான அளவிற்கு ரன்களை சேர்த்துவிட்டு அவுட்டாகினர்.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் கொல்கத்தா அணியின் மட்டையாளர்கள் திணற ஆரம்பித்ததால், வெற்றி பெற்றுவிடலாம் என பெங்களூரு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
ஆனால் திடீரென கொல்கத்தா அணியின் ரஸ்ஸல், ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தார். 13 பந்துகளில் 48 ரன்களை எடுத்து 19.1 ஓவர்களில் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

திரில் வெற்றிபெற்ற கொல்கத்தா! Reviewed by Author on April 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.