அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை! ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -


அமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப்படையை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘பயங்கரவாத அமைப்பு’ என்று குறிப்பிட்டார். இதனை இஸ்ரேல் ஆதரித்தது.

இதற்கு முன்னர் எந்த நாட்டினரும், அடுத்த நாட்டு ராணுவ படைகளை பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டது இல்லை. அதனைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று ஈரான் பதிலடி கொடுத்தது.

இதனால் இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,
‘ஈரானின் பாதுகாப்புப் படைகள் எந்த பிராந்திய நாட்டிற்கும் எதிரானது அல்ல. எங்களது படை வீரர்கள் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நிற்கிறார்கள். யூதர்களின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எங்களது முக்கிய பிரச்சனைகள்’ என தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை! ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு - Reviewed by Author on April 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.