அண்மைய செய்திகள்

recent
-

குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்? இதோ சில இயற்கை வைத்தியங்கள் -


ஒரு உறுப்போ அல்லது கொழுப்பு திசுவோ சுற்றியுள்ள பலவீனப்பட்ட சதையின் மூலம் வெளியேறி வருவது ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஆகும்.
இது தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது.
குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும்.
குறிப்பாக மலச்சிக்கல் குடலிறக்கத்திற்கு பாதிப்பிற்கு ஒரு அடிப்படை காரணம் ஆகும்.
அதிக உடல் எடை, நிறைய குழந்தைகள் பெறுதல், அதிக நேரம் சைக்கிள் பிரயாணம் செய்தல், அதிக எடை தூக்குவது, பாரம் சுமப்பது இவையும் குடலிறக்கம் ஏற்பட காரணம் ஆகின்றன.
அந்தவகையில் குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.

  • ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
  • , ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
  • வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.
  • ஒரு நாளைக்கு மூன்று முறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.
  • குடலிறக்கம் பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.
  • பழங்களில் அவகேடோ மற்றும் அன்னாசி போன்றவற்றை குடலிறக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் போது சாப்பிட வேண்டும். இதனால் அவை புடைப்பு குறைப்பதோடு, வலியையும் சரிசெய்யும்.
  • பச்சை காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைகோஸ் மற்றும் பாகற்காய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். இதனால் அவை தசைகளை வலிமையடையச் செய்து, குடலிறக்கத்தால் உள்ளுறுப்புகள் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
  • டீயிலேயே க்ரீன் டீ தான் ஹெர்னியாவை குணப்படுத்துவதில் சிறந்தது. ஆகவே தினமும் இரண்டு முறை க்ரீன் டீயை குடிக்க வேண்டும்.
  • உணவில் கோதுமை பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக செயல்பட்டு, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்? இதோ சில இயற்கை வைத்தியங்கள் - Reviewed by Author on April 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.