அண்மைய செய்திகள்

recent
-

மனித நிர்ப்பீடனத் தொகுதியின் புதிய செயற்பாடு கண்டுபிடிப்பு -


மனித உடலில் ஏற்படக்கூடிய சாதாரண நோய்களை எதிர்த்து குணப்படுத்தக்கூடிய ஆற்றல் நிர்ப்பீடனத் தொகுதிக்கு காணப்படுகின்றது.
அசாதாரண சூழ்நிலைகளில் மாத்திரமே நோய் நிவாரணிகளை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இப்படியிருக்கையில் மனித நிர்ப்பீடனத் தொகுதியின் மற்றுமொரு செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது பற்களில் ஏற்படக்கூடிய குழிகளை ஏற்படுத்துவதிலும் நிர்ப்பீடனத்தொகுதிக்கு பங்கு இருக்கின்றமையாகும்.
பற்குழிகளை ஏற்படுத்துவதில் பக்டீரியாக்களுக்கு பகுதியாக பங்கு இருக்கின்றமை ஏற்கணவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
எனினும் மற்றைய காரணியை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையிலேயே இப்புதிய தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இவ் ஆராய்ச்சியின்போது பற்குழிகளை ஏற்படுத்துவதில் நியூட்ரோபில்ஸ் எனப்படும் நிர்ப்பீடன கலங்கள் பக்டீரியாக்களுக்கு உதவி செய்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.


மனித நிர்ப்பீடனத் தொகுதியின் புதிய செயற்பாடு கண்டுபிடிப்பு - Reviewed by Author on April 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.