Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில் பொருட்களின் விலையேற்றம் விசாலாமாகிய நிலையிலேயே இயேசுவின் உயிர்ப்பு விழா-மன்னார் ஆயர் இம்மானுவேல் ஆண்டகை

மக்கள் மத்தியில் கவலைகள், கண்ணீர், ஏக்கம், எதிர்பார்ப்பு
இவற்றுக்கெல்லாம் தீர்வு எட்டப்படாத நிலையிலும் அரசியல் அமைதியின்மை,பொருட்களின் விலையேற்றம் விசாலாமாகி மக்களை விரக்தியின் எல்லைக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சூழலிலேதான் நாம் இறை இயேசுவின் உயிர்ப்பு விழாவை இம்முறை கொண்டாடுகின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பிடெலிஸ் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவுக்கான தனது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பிடெலிஸ் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கிறிஸ்து உயிர்ப்பு விழாவை முன்னிட்டு விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில்

கவலையும், கண்ணீரும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் தீர்வு காணப்படாமல்
தொடர்ந்து கொண்டிருக்கும் சாத்வீகப் போராட்டங்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் உறவுகளின் வேதனைக் குரலும, வறுமையும், நோயும், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் அசாதாரண நிலைமைகளும், பல்வேறுப்பட்ட முரண்பாடுகளும், அரசியல் அமைதியின்மையும், பொருட்களின் விலையேற்றமும்
விசாலாமாகி நம்மையெல்லாம் விரக்தியின் எல்லைக்குத் தள்ள எத்தனித்துக்
கொண்டிருக்கும் நிலையை இன்று நாம் யதார்த்தமாக காணுகின்றோம். இந்த ஒரு சூழமைவிலேதான் இவ்வாண்டு நம் ஆண்டவரும், மீட்பருமான இயேசு கிறிஸ்து சாவின் மீதும் அநீதியின் மீதும் வெற்றிக்கொண்டு உயிர்பெற்று எழுந்த விழாவை நினைகூர்ந்து கொண்டாடுகின்றோம்.

நம் அண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நாம் வெறுமனமே ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்க்க முடியாது. மேற்கூறப்பட்ட அசாதாரணமான சூழமைவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு நம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு ஒரு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஆறுதலையும் தருவதாக இருக்கின்றது. தூய பவுலடியார் கூறுவது போல 'நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை.' (காண். 2கொரி 4.8-9) என்னும் உண்மையை, நம்பிக்கையை இதயத்தில் இருக்கவைத்து, இயங்கவைத்து இயங்கிக்கொண்டிருக்கும் சக்தியை இந்த உயிர்ப்புப் பெருவிழா நமக்குத் தருகின்றது.

'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்லகின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருளவேண்டாம்' (காண். யோவா 14.27)
என்று வாக்களித்த இயேசு தாம் உயிர்பெற்று எழுந்தபின் தான் யாரையெல்லாம் சந்தித்தாரோ அவர்களுக்கெல்லாம் கூறியது :உங்களுக்கு அமைதி உரித்தாகுக'
என்ற வாழ்த்தாகும். இயேசுவின் இந்த அற்புதமான அழகான ஆறுதலான வாழ்த்து உங்கள் ஒவ்வொருவரினதும் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆன்மாவிற்கும் அரணும் பாதுகாப்புமாய் அமைவதாக. ஏதிர்நோக்கத் தரும் கடவுள் நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும் உங்களை நிரப்புவாராக.

கிறிஸ்து உயிர்த்தெழுந்த மகிழ்வின் அடையாளமாக இருப்பது புதுவாழ்வு
கிறிஸ்துவின் உயிர்ப்புக்குப்பின் சீடர்களிடமும் மக்களிடமும் புதுவாழ்வு
மலர்ந்தது. இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார்.
அவ்வாறு நாமும் புது வாழ்வுப் பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின்
வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். (காண். உரோ.6.4) புதுபிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்N;றார் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமகன் என்றும்
வேறுபாடி;லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்' (காண். கொலே.3.11)

புதுப்பித்தலை நமது மறைமாவட்டத்தின் முக்கிய அருட்பணி இலக்காக கொண்டு புதுப்படைப்பாகி தொடக்கக்காலத் திருஅவையின் துல்லியமான தோற்றமாக அமையும் அன்பிய வாழ்வை வாழுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவரும் இவ்வேளையில் புனித பவுலடியார் தன் இறை அனுபவமாக வெளிப்படுத்தியிருக்கும் மேற்குறிப்பட்ட வார்த்தைகள் நம்மை இன்னும் ஆழ்ந்து சிந்தித்து நம் ஒவ்வொருவரையும் செயற்பாட்டுநிலைக்கு கொண்டுவரும் புதுப்பித்தல் வாழ்வுக்கு அழைத்து நிற்கின்றது. இதுவே கிறிஸ்துவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியில் பங்கேற்று அவருடைய உயிர்ப்பக்கு சான்றுபகரும் மக்களாக புதுவாழ்வின் நற்செய்தியை எடுத்தியம்பும் செயலூக்கம் பெறும் மக்களினமாக இயேசுவின் சீடர்களாக மாற்றம் பெறும் வாய்ப்பாக அமைகின்றது.

இந்நாட்களில் எமது இறைவனை நோக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் அனைவரினதும் அமைதியையும் மகிழ்வையும் மையப்படுத்தியதாக அமைவதாக. முண்ணினின்று உண்மை முளைத்தெழட்டும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கட்டும். நல்லதையே ஆண்டவர் அருள்வாராக. நல் விழைவையே நம் நாடும் கொடுப்பதாக என்று இறை ஆசீரோடு
இணைந்து உயிர்ப்புப் பெருவிழா நல் வாழத்துக்களைத் தெரிவித்து
நிற்கின்றேன் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பிடெலிஸ்
இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு கிறிஸ்து உயிர்ப்பு
பெருவிழாவுக்கான தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில் பொருட்களின் விலையேற்றம் விசாலாமாகிய நிலையிலேயே இயேசுவின் உயிர்ப்பு விழா-மன்னார் ஆயர் இம்மானுவேல் ஆண்டகை Reviewed by Author on April 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.