அண்மைய செய்திகள்

recent
-

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இரணைதீவு மக்கள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் MSEDO    வினாலும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு மற்றும் ஊடகங்கள் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் T.கனகராஜ் தலைமையில் மனித உரிமை ஆணைக்குழுவினர் கடந்த மாதம் களப்பயண விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

குறித்த கல விஜயத்தின் போது இரணை தீவு மக்களுடன் இதுவரை மீள்குடியேற்றத்தின் பின்னர் பூர்த்தியாக்கப்பட்ட பூர்த்தியாக்கப்படாத விடையங்கள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மக்களினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை எதிர்வரும் 03.05.2019 இற்கு முன்னர் அறிக்கை ஒன்றினை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் மற்றும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்

  • கிராம சேவையாளரின் சேவைகள்
  • பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள்
  • சமுர்த்தி கொடுப்பனவுகள்
  • வாழ்விடம்
  • நீர் தேவைப்பாடு
  • போக்குவரத்து
  • தபால்சேவை
  • மின்சாரம்
  • சுகாதரதிணைக்களத்தின் செயற்பாடு
  • வைத்தியதுறை
  • மதவழிபாடுகள்  தொடர்பாக மக்களால் தெரிவிக்க பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கையினை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது

குறித்த அறிக்கையினை வருகின்ற மாதம் மூன்றாம் திகதிக்கு முன்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ மேலும் தெரிவித்தார்.






இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை Reviewed by Author on April 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.