அண்மைய செய்திகள்

recent
-

மன்/அல்-அஸ்ஹர் தேசியபாடசாலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்-படங்கள்-

 வடக்கு-கிழக்கு மாகாணங்களை இனம் காட்டி சர்வதேசத்திடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டு தெற்கில் உள்ள ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்துள்ள வரலாறு தான் கடந்த கால அரசாங்கத்தின் வரலாறு என கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசியபாடசாலையில் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி திறப்பு விழா நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில்  06-04-2019  சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் பாடசாலையில் இடம் பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த ஆசிரியர் விடுதியை திறந்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

எதுவாக இருந்தாலும் இறுதி யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த கடந்த அரசாங்கம் இறுதியின் போது மாகாணங்களை இனம் கண்டு அவர்களுக்கான அபிவிருத்தியை உரிய முறையில் செய்து கொடுக்கவில்லை .

வடக்கு-கிழக்கு மாகாணங்களை இனம் காட்டி சர்வதேசத்திடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டு தெற்கில் உள்ள ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்துள்ள வரலாறு தான் கடந்த கால அரசாங்கத்தின் வரலாறு.

இது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது.எதிர்வரும் காலங்களில் நாம் யாரை தெரிவு செய்யப் போகின்றோம். யாரினூடாக எமது கல்வியை வளர்க்கப் போகின்றோம் என்கின்ற சிந்திக்கக் கூடிய நிலையை கடந்த கால அரசாங்கம் இன்று எங்களுக்கு உருவாக்கித்தந்துள்ளது.

பாதீக்கப்பட்ட பாடசாலைகளை பார்த்தால் இன்று எத்தனையோ பாடசாலைகள் மர நிழல்களிலும், ஓலைக் கொட்டில்களிலும் தளபாடம் இன்றி நிலத்தில் இருந்தும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

எத்தனையோ ஆசிரியர்கள் தமது பாடசாலைகளுக்கான ஆசிரியர் விடுதி இல்லாமல், உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல், அவர்களுடைய குடும்பங்களை பிரிந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அந்த ஆசிரியர்கள் எமது மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.

இவர்களுக்காக இன்று ஜக்கிய தேசிய முன்னனி அரசாங்கத்தின் ஊடாக கல்வி அமைச்சுக்கு நிதிகளை வழங்கி மாகாண சபைக்குற்பட்ட பாடசாலைகள்,தேசிய பாடசாலைகள் என்று இல்லாது அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திக்கு என பல மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்கள் நூறு பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையவுள்ள நிலையில் கையளிக்கப்படவுள்ளது.

வரவு செயலவு திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளை இனம் கண்டு அவற்றுக்கான நிதி உதவிகள், ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். மேலும் மாணவர்களுக்கு இலவச கல்வி உள்ளிட்ட இலவச திட்டங்கள் பலவற்றை வழங்கி வருகின்றோம்.

கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களை இழந்து இன்று நாம் ஒரு மட்டத்தில் நிற்கின்றோம்.
இதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையும் ஒரு காரணம்.முஸ்ஸீம் சகோதர மக்கள் இன்றும் வேறு இடங்களில் இடம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும்.
குறிப்பாக சொந்த இடமான யாழ் மாவட்டம்,மன்னார் மாவட்டத்திற்கு மீண்டும் திரும்பி வர வேண்டும்.மீள் குடியேற வேண்டும்.

அதற்கான முழு வரப்பிரசாரத்தையும் எங்களுடைய அரசாங்கம் இந்த மாவட்டத்து அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

முஸ்ஸீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான அனைத்து பொறுப்பும் பிரதமர் அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக நான் கல்வி அமைச்சிற்கும், பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.

.அனைத்து பிரச்சினைகளுக்கும் பகுதி பகுதியாக தீர்வை பெற்றுத்தருவேண் என அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன்,மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















மன்/அல்-அஸ்ஹர் தேசியபாடசாலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்-படங்கள்- Reviewed by Author on April 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.