அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணின் மைந்தன் M.Y.சஹிபுல் யமீன் உலக சாதனைக்காக…தேசிய ரீதியில் வரலாற்று சாதனை-படங்கள்



மன்னார் எருக்கலம்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்தினைச்சேர்ந்த முஹம்மது யாசீம் மஸ்குறா தம்பதிகளின் புதல்வன் M.Y.சஹிபுல் யமீன்  மன்னார் மண்ணில் இருந்து ஜிம்னாஸ்ரிக் துறையில் உலக சாதனைக்காக தன்னை தயார்படுத்தி தேசியரீதியில் வரலாற்று சாதனை படைத்து இருக்கும் மன்.அல்-மினா மகா வித்தியால உயர்தர கலைப்பிரிவு மாணவனான இளம் ஜிம்னாஸ்ரிக் வீரன் M.Y.சஹிபுல் யமீன் வடமாகாணத்திற்கும் மன்னார் மண்ணிற்கும் முதல் தடவையாக தேசிய ரீதியில் வரலாற்று சாதனையை நீலைநாட்டியுள்ளார்.

மன்னாரில் இளைஞர்சேவைகள் மன்றத்தின் ஊடாக நடைபெற்ற
3G-Youth With Talent போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 10 இளைஞர்கள் வீதம் 24 மாவட்டங்களில் 240 இளைஞர்களும் 25 கொழும்பில் இருந்து 20 இளைஞர்களும் எல்லாமாக 260 இளைஞர்கள் போட்டியாளராக தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
 போட்டிகளில் 260 போட்டியாளர்கள் 100போட்டியாளர்களாகி 50போட்டியாளர்களாகி 28போட்டியாளர்களாகி 03 சுற்றுக்கள்  கடந்து 08போட்டியாளர்களாகி இறுதிச்சுற்றுக்கு தேர்வாகி

இறுதி சுற்றானது 06-04-2019  மஹரகம கொழும்பில் நடைபெற்றது. அப்போட்டியில் நடுவர்கள்  பார்வையாளர்கள் முன்னிலையில்  கண்ணாடி பெட்டிக்குள் தன்னை முழுமையாக அடைத்துக்கொண்டு அப்பெட்டியினை தண்ணீர் நிறைந்த இன்னொரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து அதன் மேல் ஐஸ் கட்டிகளை கொட்டி சுமார் 6 நிமிடங்கள் இருந்துள்ளார்.

இன்னும் சில நொடிகள் இருந்தால் அது உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை நிகழ்த்தியிருக்கலாம் ஆனால் நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகவும் பயந்து உயிராபத்து எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக விரைவாக வீரனின் சாகாசத்தினை நிறுத்துமாறு பணித்துள்ளனர். உண்மையில் அந்த நிமிடம் உலகசாதனை படைக்க வேண்டும் என்பதையும் தாண்டி எல்லோரும் மனித நேயத்துடன் செயற்பட்டமை பாராட்டுக்குரியது.

உலக சாதனை இருக்கின்றது இதுவரை 06 நிமிடமும் 05 வினாடிகளும் தான் உலக சாதனைக்கு அருகில் சென்று வந்திருக்கும் மன்னார் மண்ணின் மைந்தன் M.Y.சஹிபுல் யமீன் அவர்களுக்கும் அவரது பெற்றோர்கள் நண்பர்கள் உதவிபுரிந்த அனைவருக்கும் எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

சாதனை மாணவன் M.Y.சஹிபுல் யமீனுக்கு வெற்றிக்கேடையமும்  மகிழுந்து-கார் ஈருளி-மோட்டடார் சைக்கிளும் பணப்பரிசும் வழங்கி கௌரவித்துள்ளனர் இன்று 07-04-2019 மாலை 3-00 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து அமோக வரவேற்பளிக்கப்பட்டு அவரது கிராமத்துக்கு அழைத்துச்சென்றனர்.






-VMK-

மன்னார் மண்ணின் மைந்தன் M.Y.சஹிபுல் யமீன் உலக சாதனைக்காக…தேசிய ரீதியில் வரலாற்று சாதனை-படங்கள் Reviewed by Author on April 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.