அண்மைய செய்திகள்

recent
-

ஆன்மீக வகுப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்- சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் வேண்டுகோள்.

ஆன்மீக வகுப்புக்களுக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்  என மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இனையத்தின் தலைவர்
சிவஸ்ரீ மஹா தர்ம குமாரக் குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இன்று (11) நடைபெற்ற மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட  கலந்துரையாடல் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக் கருத்தை தெரிவித்தார்  .


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

ஞாயிறு தினங்களில் ஆன்மீக வகுப்புகள் நடைபெற வேண்டிய நேரங்களில் குறிப்பாக காலை 8 மணி முதல்               11 மணி வரையான அந்தக் குறித்த நேரத்தில் வழமையாக  ஆன்மீக கல்வி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

 இந்த நேரங்களில் பிரத்தியேகமான பாட வகுப்புகள் தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களிலும் வீடுகளிலும் பாடசாலைகளிலும் நடைபெற்று வருவதனால் மாணவர்கள் அறநெறி வகுப்புகளுக்கு சமூகம் அளிக்க முடியாத இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

 மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்வித் துறையிலும் எமது மாவட்டம் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் இது காலத்தின் தேவை என்பதும் மறுப்பதற்கில்லை .

ஆனாலும் ஆன்மீக கல்வி இல்லாத ஒரு சமூகம் தமது சமயத்தினை அறியாது சமய அனுட்டானத்தை பேனாது அதன் படி வாழாது அதன் பால் ஒழுகாவிடின்  எதிர்காலத்தில்  வன்முறைப் போக்கு கொண்டவையாகவும் மதங்களை மதிக்க தெரியாதவர்களாகவும் கலை கலாசார  பண்பாட்டு விழுமியங்கள் இல்லாத ஒரு சமூகமாக மாறி விடும்  அபாயநிலை ஏற்படும் .

நாங்கள் எவ்வளவுதான் கல்வி கற்றாலும் அந்தந்த சமயத்தைச் சார்ந்தவர்கள்அந்தந்த மதத்தினுடைய போதனைகள்  சமயக்கல்வி பண்பாடு கலாசாரம்  என்பவற்றை முழுமையாக  அறிந்து மற்ற மதங்களையும் மதிக்க கூடிய வகையிலே மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையிலே அவர்கள் எதிர்காலத்தில் முன்னேற வேண்டுமானால் ஆன்மீகக் கல்வி இன்றியமையாத ஒன்றாகும் .

எவ்வளவு தான் கல்வியில்   முன்னேறி உயர் நிலைக்கு வந்தாலும் ஆன்மீக சிந்தனை இல்லையெனில் வாழ்வு முழுமை பெறாது .

ஒவ்வொரு சமயங்களிலும்இந்த ஆன்மிகக் கல்வி வகுப்புகள் ஒவ்வொரு பிரதி ஞாயிறு தோறும் காலையிலேயே நடைபெற்று வருகின்றது.

 இந்து சமயத்தில் அறநெறி வகுப்புக்கள் ஆகவும் கத்தோலிக்க சமயத்தில் மறைக்கல்வி வகுப்புகளாகவும் இஸ்லாமிய மார்க்கத்தில்அவை அஹதிய்யா  வகுப்புக்களாகவும் பௌத்த சமயத்தில் தாம்பாசலைகளாகவும் தொடர்ச்சியாக ஞாயிறு தினங்களில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டாலும்அவர்களின் ஆன்மிக கல்விகளை பாதிக்காத வண்ணம் வகுப்புகளை ஒழுங்கு செய்வது சிறப்பானதாக இருக்கும்.

 கல்வி நிறுவன உரிமையாளர்களையும் பாடசாலை சமூகத்தினர்  மற்றும் வீடுகளில் பிரத்தியேக வகுப்பு நடாத்துபவர்களையும் காலை 8 மணி முதல் 11 மணி வரையான நேரத்தினை ஞாயிற்றுக்கிழமை தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை காலை 11மணிவரை நிறுத்தி ஆன்மீக கல்விகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் செயல் பட வேண்டும் என நாம் அன்பாகவும் வினயமாகவும் கேட்டு நிற்கின்றோம் .

சில கருத்துக்கள் பெற்றோர் மட்டத்தில் இருந்து வருகின்றன.

 வவுனியா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விசேட ஆசிரியர் குழாம்  மன்னார் கல்வி நிலையங்களில் விசேட வகுப்புகளை சனி, ஞாயிறு தினங்களில் நடத்துவதனால் பிள்ளைகளுடைய கல்வியின் எதிர்காலம் கருதி அந்த வகுப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்  .

பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்கள் தவிர தரம் ஒன்றிலிருந்து10 வரையான மாணவர்கள் ஆவது குறிப்பிட்ட இந்த ஆன்மீக வகுப்புக்கள் நேரங்களில் ஆன்மீக வகுப்புக்களுக்கு  தவறாது வருகை தர வேண்டும்.

 இதற்கான ஒழுங்குகளை பெற்றோர்கள் பாடசாலை சமூகம் கவனத்தில் எடுத்து ஒத்துழைப்பு  வழங்குமாறு நாம் வினயமாக வேண்டி நிற்கின்றோம் .

இவ்விடயத்தில் அனைவரது பூரண ஒத்துழைப்பினை வேண்டி நிற்கக்கின்றோம் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆன்மீக வகுப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்- சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் வேண்டுகோள். Reviewed by Author on April 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.