அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை மரணம்! -


அமெரிக்காவின் விண்வெளித்துறை வரலாற்றில் முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜெர்ரி காப் மரணமடைந்தார்.
கடந்த 1961ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளித்துறை ஆராய்ச்சி கூடமான நாசாவில், ஜெர்ரி காப் என்ற பெண் அந்நாட்டின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

இவர் ஆரம்ப காலத்தில் ஆண்களுக்கு போர் விமானங்களை ஓட்ட கற்றுத்தரும் பயிற்சியாளராக பணியாற்றினார். பின்னர், ஜெர்ரி காப்புடன் சேர்ந்து மொத்தம் 13 பெண்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கான உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர்.
அவர்களை ‘மெர்குரி 13’ என்று ஊடகங்கள் குறிப்பிட்டன. ஆனால், எந்த விண்வெளி பயணத்திலும் ஜெர்ரி காப்-புக்கு பயிற்சிக்கு பின்னர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அனைத்து துறைகளிலும் ஆணாதிக்கத்திற்கு எதிராக, பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஜெர்ரி குரல் எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, வட அமெரிக்காவில் தொலைதூர பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், உணவுப்பொருள் மற்றும் மருந்துகளை கொண்டு சேர்க்கும் விமானியாக சுமார் 30 ஆண்டுகாலம் ஜெர்ரி காப் சேவையாற்றினார்.
அப்போது, குறுகிய நேரத்தில் விமானங்கள் சென்று சேரும் வகையில் புதிய வழித்தடங்களை கண்டுபிடித்து பலரை ஆச்சரியத்துகுள்ளாக்கினார். இதற்காக இவருக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டதுடன், விண்வெளித்துறைக்கு சுனிதா வில்லியம்ஸ் உட்பட சில பெண்களும் சென்று சாதிக்க காரணமாகவும் அமைந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில், 88வது வயதில் ஜெர்ரி காப் காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை மரணம்! - Reviewed by Author on April 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.