அண்மைய செய்திகள்

recent
-

உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி இதுதான்!


இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி தான் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி என்று தெரிய வந்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் தசிகங்க் என்ற இடம் ஆண்டு முழுவதும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் பகுதியாகும். இந்த பகுதிக்கு பொதுவாக மக்கள் யாரும் அதிகம் செல்வதில்லை என்றாலும், 48 வாக்காளர்கள் இப்பகுதியில் இருக்கிறார்கள்.

மே 19ஆம் திகதி இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தல் இங்கு நடக்க உள்ளது. எனவே, அங்கு உள்ள ஒரு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மிக பழமையான கட்டிடமாக அந்த பள்ளிக்கூடம் இருந்ததால், அங்கு வாக்குச்சாவடி அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தசிகங்க் நகரில் வாக்குச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்நகரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தசிகங்க் மற்றும் கேட் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 30 ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 48 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த வாக்குச்சாவடி தான், உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

தசிகங்க் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி இதுதான்! Reviewed by Author on April 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.