அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலை கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டு அனார்த்தத்தில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி பணம் வழங்கி வைப்பு-படம்



மன்னார்-வங்காலை கடற்பரப்பில் கடந்த வருடம் திடீர் அனார்த்தத்தின் போது உயிரிழந்த மீனவர் ஒருவரின் குடும்பத்திற்கு இன்று புதன் கிழமை (22) 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

-குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் குடும்பத்திற்கே குறித்த காப்புறுதி தொகையாக 10 இலட்சம் ரூபாவிற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களமும், தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியமும் இணைந்து மீனவர்களுக்கான காப்புறுதி திட்டத்தை ஊக்குவிக்கும்  செயல் பாடாக குறித்த காப்பறுதி பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வங்காலையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கச் சென்ற மீனவரான எஸ். குணசீலன் (வயது-51) என்பவர் கடலில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தின் போது உயிரிழந்தார்.

இதன் போது   உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு   இலவச காப்புறுதி திட்டத்தின் ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபாய் இன்று புதன்கிழமை (22) காசோலை வழங்கி வைக்கப்பட்டது .

குறித்த 10 இலட்சம் ரூபாவில் 5 இலட்சம் குறித்த மீனவரின் மனைவிக்கும், மீதம் 5 இலட்சம் ரூபாய் நான்கு பிள்ளைகளுக்கும் தலா ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.

கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர்.ஏ.ஏ. விக்கிரம சிங்க , உத்தியோகத்தர்கள், தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திருமதி ஜோசப் சீரான நயனா, நானாட்டான் கடற்தொழில் அலுவலகர் இ.றொபின்யூட் ஆகியோர்கலந்து கொண்டு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.r





மன்னார் வங்காலை கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டு அனார்த்தத்தில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி பணம் வழங்கி வைப்பு-படம் Reviewed by Author on May 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.