அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான கட்டுக்கரைக்குளத்தின் கீழ் 1695 ஏக்கரில் இம்முறை சிறுபோகம் செய்ய தீர்மானம்.

மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது மன்னாரின் பிரதான குளமாகிய கட்டுக்கரைக் குளத்தில் 8 அடி 3 அங்குலம் நீர் இருப்பதால் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் 2019 ஆண்டுக்கான சிறுபோகம் 1695 ஏக்கரில் மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை (03.05.2019) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
சீ.மோகன்ராஸ் தலைமையில் முருங்கன் கட்டுக்கரைக்குள திட்ட முகாமைத்துவ கேட்போர் கூடத்தில் கட்டுக்கரைக் குளத்தின் கீழு; சிறுபோக பயிர் செய்கை விடயமான கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கட்டுக்கரைக்குளத்தின் கீழுள்ள ஐந்து கமநல சேவைகள்
பிரிவிலுள்ள 83 விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ் கூட்டத்தில் மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு பிரதேச
செயலாளர்கள், கட்டுக்கரைக்குளத்திட்டம் வதிவிட திட்டமுகாமையாளர்,
முருங்கன் பிரதேச நீர்பாசனப் பொறியியலாளர், கமத்தொழில் காப்புறுதிச் சபை உதவிப் பணிப்பாளர், விவசாய ஆராய்ச்சி உதவிப்பணிப்பாளர் உட்பட வங்கி முகாமையாளர்கள் என விவசாயத்துடன் தொடர்பான பல அதிகாரிகள் இவ் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவ் கூட்டத்தில் முருங்கன் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர்
தெரிவிக்கையில் தற்பொழுது மன்னார் பிரதான குளமாகிய கட்டுக்கரைக்குளத்தில் 8 அடி 3 அங்குளம் நீர் காணப்படுவதால் 1695 ஏக்கரில் சிறுபோகம் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கமைய பின்வரும் புலவுகள் பிரதேச நீர்பாசனப் பொறியியலாளரால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. அதாவது சின்ன உடைப்பு பிரதான வாய்க்காலின் கீழ் 715 ஏக்கரிலும், பெரிய உடைப்பு பிரதான வாய்க்கால் கீழ் 538 ஏக்கரிலும்,
அடைக்கலமோட்டை பிரதான வாய்க்கால் கீழ் 439 ஏக்கரிலும் இம்முறை சிறுபோக நெற்செய்கை செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ள்பட்டுள்ளது.

விதை நெல் இரண்டு மாதம் முதல் மூன்றரை மாத நெல் இனம் காணப்படுவதால் விவசாயிகள் விரும்பிய இன நெல்லை தெரிவு செய்து செய்கையை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ் நெற்செய்கைக்கான முதல் நீர் விநியோகத் திகதி 25.05.2019 எனவும்,
விதைப்பு இறுதித் திகதி 15.06.2019 எனவும், காப்புறுதி செய்யப்பட
வேண்டிய இறுதி திகதி 15.06.2019 எனவும், இறுதித் தண்ணீர் விநியோகத் திகதி
13.09.2019 எனவும், அறுவடை இறுதித் திகதி 30.10.2019 எனவும் இக்
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன.




மன்னார் பிரதான கட்டுக்கரைக்குளத்தின் கீழ் 1695 ஏக்கரில் இம்முறை சிறுபோகம் செய்ய தீர்மானம். Reviewed by Author on May 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.