அண்மைய செய்திகள்

recent
-

170 வருட சிறைத்தண்டனை பெரும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே? -


அமெரிக்க அரசின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதற்காக, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது 17 புதிய குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க அரசின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதற்காக, அவர் மீது 17 புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

ஜூலியன் அசாஞ்சே, முன்னாள் இராணுவ உளவுத்துறை ஆய்வாளர் செல்சி மேனிங் உடன் சேர்ந்து ஒரு உளவுத்துறை கணினியை வெடிக்க செய்ததாக முன்னர் கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களைப் பற்றிய அறிக்கை மற்றும் வெளியுறவுத்துறை அறிக்கைகள் உட்பட, இரகசியமான தேசிய பாதுகாப்பு ஆவணங்களைப் பெறுவதற்கு அசாஞ்சே, செல்சி மேனிங் உடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு "கடுமையான தீங்குகளை விளைவிக்கக்கூடியவை" என்று அந்த குற்றச்சாட்டில் கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கு தகவல் கொடுத்து கொண்டிருந்த உள்ளூர் ஆப்கானியர்கள் மற்றும் ஈராக்கியர்களின் பெயர்களைக் வெளியிட்டுள்ளார். அதே போல் அமெரிக்க அரசாங்கத்திற்கான பிற இரகசிய ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு தகவல் கொடுத்ததற்காக அப்பாவி மக்களை பெரும் ஆபத்திற்கு தள்ளியிருக்கிறார் என குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறையின் 17 குற்றச்சாட்டுக்களில் ஒவ்வொன்றுக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.
170 வருட சிறைத்தண்டனை பெரும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே? - Reviewed by Author on May 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.