அண்மைய செய்திகள்

recent
-

ஐபிஎல் 2019 பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்று அணிகள்... நான்காவது அணியாக வருவதற்கு யாருக்கு வாய்ப்பு அதிகம்? -


ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால், நான்காவது எந்தணி என்பது தான் இப்போது கடும் போட்டியாக நிலவி வருகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தில் உள்ளது. ஏனெனில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 12 போட்டிகள் விளையாடி முடித்துவிட்டது.

இதில் சென்னை, டெல்லி, மும்பை போன்ற மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் தற்போது நான்காவது அணி யார் என்பதில் தான் கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பஞ்சாப் போன்ற அணிகளுடன் நிலவி வருகிறது.
இந்த அணிகளில் ஹைதராபாத் 12, ராஜஸ்தான் 11, கொல்கத்தா, பஞ்சாப் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன. இந்த அணிகள் பங்கேற்க உள்ள அடுத்த ஐந்து போட்டிகளில், பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

காரணம், 12 புள்ளிகளுடன் உள்ள ஹைதராபாத் பெங்களூரை வென்றால் 14 புள்ளிகள் பெற்று, தன் அதிகமான நெட் ரன் ரேட் அடிப்படையில், பிளே-ஃப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்றுவிடும். இந்த அணியின் வெற்றி மற்ற அணிகளான ராஜஸ்தான், கொல்கத்தாவிற்கு பாதிப்பாக அமையும்?
ராஜஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. அந்த அணி தன்னுடைய அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அதிகபட்சம் 13 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும்.

கொல்கத்தா அல்லது பஞ்சாப் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், ஹைதராபாத் அணியின் ரன் ரேட்டை தாண்டினால் மட்டுமே புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பெற முடியும்.
பெங்களூர் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி வெற்றி பெறாவிட்டால், அந்த அணி 12 புள்ளிகள் மட்டுமே பெறும். அந்த சூழ்நிலையில், ராஜஸ்தான் தன் கடைசி லீக் போட்டியில் வென்றால், நேரடியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதே சமயம், ராஜஸ்தான் தோல்வி அடைந்தால், பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிடும்.

ஐபிஎல் 2019 பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்று அணிகள்... நான்காவது அணியாக வருவதற்கு யாருக்கு வாய்ப்பு அதிகம்? - Reviewed by Author on May 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.