அண்மைய செய்திகள்

recent
-

உலக சினிமாவின் திருநாள் – 22 வது ஹொலிவூட் திரைப்பட விருதுகள்!


உலக சினிமாவை கைக்குள் அடக்கிவைத்திருக்கும் கலைஞர்களை கௌரவிக்கும், 22 வது வருடாந்த ஹொலிவூட் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு இந்த முறை கலிஃபோர்னியா, பெவர்லி ஹில்ஸில் இடம்பெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை ஹொலிவூட் கலைஞர்கள் பட்டாளமே ஒன்று சேர்ந்து களைகட்டச் செய்துள்ளனர்.

இது பொழுதுபோக்குத் துறை விருதுகள் பருவத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பமாக கருதப்படுவதுடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் ஒஸ்கார் கலைக்கழக விருதுக்கு முன்னோடியாக திகழ்கின்றது.

ஒஸ்கார் விருதுகளுடன் இந்த பருவகாலம் நிறைவடையும். ஒஸ்கார் விருதுகளின் போது திரைப்படங்களுக்கு எந்தவகையான வரவேற்பு இருக்கும் எப்பதை ஹொலிவூட் திரைப்பட விருதுகள் முன்கூட்டியே எதிர்வு கூறுகின்றன.

சுமார் 320 க்கும் மேற்பட்ட நட்சத்திர கலைஞர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இங்கு கடந்த 22 வருட காலமாக சிறப்பிக்கப்பட்டனர். அத்துடன் அவர்களில் 130 பேருக்கும் அதிகமானவர்கள் ஒஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், சிலர் விருதுகளை வெற்றி கொண்டும் உள்ளனர்.

நேற்றைய நிகழ்வை நகைச்சுவை நடிகையான அவ்க்வாவினா வழிநடத்தியதுடன், பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அவர் அண்மையில் வௌியான கிரேஸி ரிச் ஏசியன்ஸ் மற்றும் ஓசியன்ஸ் 8 ஆகிய திரைப்படங்களில் நடத்துள்ளார்.

இந்த விருது வழங்கல் நிகழ்வில், Nicole Kidman ஹொலிவூட் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். அத்துடன் Glenn Close ஹொலிவூட் சிறந்த நடிக்கைக்கான விருதை தனதாக்கிக் கொண்டார். இதேவேளை சிறந்த நடிகருக்கான விருதை Hugh Jackman பெற்றுக் கொண்டார்.

Damien Chazelle – சிறந்த ஹொலிவூட் இயக்குனருக்கான விருதையும், Timothee Chalamet ஹொலிவூட் துணை நடிகருக்கான விருதையும் பெற்றனர்.

அதேவேளை, திரைத்துறைக்கு புதுவரவுகளான Amandla Stenberg – The Hate U Give திரைப்படத்தில் நடித்தமைக்காக ஹொலிவூட் மூர்க்கத்தனமான ஆக்கத்திறன் கொண்ட நடிகைக்கான விருதை பெற்றார்,

இதேபிரிவில் ஆண்களுக்கான விருதை Blackkklansman திரைப்படத்தில் நடித்தமைக்காக நடிகர் John David Washington பெற்றுக் கொண்டார்.

இதனிடையே, செயல்திறன் மிக்க இயக்குனருக்கான விருதை Beautiful Boy திரைப்படத்திற்காக பெல்ஜியத்தைச் சேர்ந்த இயக்குனர் Felix van Groeningen தனதாக்கிக் கொண்டார்.

அத்துடன், நான்கு திரைப்படங்கள் ஹொலிவூட் சிறப்பு விருதுகளை பெற்றன. Black Panther, Crazy Rich Asians, Believer, Incredibles 2 ஆகியனவே இந்தமுறை விருது வழங்கல் நிகழ்வில் சிறப்பான வரவேற்பை பெற்ற திரைபபடங்களாகும்.


உலக சினிமாவின் திருநாள் – 22 வது ஹொலிவூட் திரைப்பட விருதுகள்! Reviewed by Author on May 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.