அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட 60 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள்! -


பிரஞ்சு இந்திய பெருங்கடல் தீவான ரீயூனியனில் இருந்து 60 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அங்குள்ள அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்த 60 பேர் குழுவில் 3 பெண்கள் மற்றும் 3 சிறார்களும் உள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி 120 பேர் கொண்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் குழு ஒன்று ரீயூனியன் தீவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 4,000 கி.மீ தொலைவு மீன்பிடி படகு ஒன்றில் பயணமான இவர்கள், இதற்கென தலா 2,000 முதல் 5,000 யூரோ அளவுக்கு கட்டணமாக செலுத்தியுள்ளனர்.

இவர்களுக்கு உதவிய படகு உரிமையாளர்களான 3 இந்தோனேசியர்களை அங்குள்ள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மே மாதம் 15 ஆம் திகதி அவர்கள் மூவரும் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுமார் 273 இலங்கையர்கள் ரீயூனியன் தீவுக்கு படகு மூலம் சென்றடைந்தாக கூறப்படுகிறது.
அதில் 130 பேர் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் புகலிடக் கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்வரை காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எஞ்சியவர்களை ரீயூனியன் நிர்வாகம் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட 60 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள்! - Reviewed by Author on May 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.