அண்மைய செய்திகள்

recent
-

கடந்தகால யுத்த சுமைகளை சுமந்த நாம் தொடர்ந்து அதில் பயணிக்க எம்மை ஆளாக்கக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினர்A.T.லுஸ்ரின்



யுத்தக் காலத்தில் நாம் எவ்வாறான துன்பங்களை சுமந்தோம் என்பது
எல்லோருக்கும் நன்கு தெரியும். ஆகவே எதிர் காலத்திலும் அவ்வாறான
சம்பவங்கள் நடக்காதிருக்க நாம் அனைவரும் ஒன்றுபட்ட சகோதரத்துவமாக வாழ முனைய வேண்டும் என மன்னார் பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினர்A.T.லுஸ்ரின் இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை  14.05.2019 மன்னார் பிரதேச சபையின் 14 வது மாதாந்த
அமர்வு இதன் தவிசாளர் S.H.M.முஜாஹீர் தலைமையில் நடைபெற்றது. இவ் கூட்டத்தின் ஆரம்பத்தில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும்
பிரதேச சபை ஊழியர்கள் கடந்த 21 உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று ஆலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கான அஞ்சலிகளை நிகழ்த்தினர். இவ் நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினர் A.T.லுஸ்ரின தொடர்ந்து பேசுகையில்

கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பு தின ஞாயிறு
வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த வேளையில் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஒரு மதத்தின் பெயரால் இன்னொரு மதத்தினர் மீது நடாத்தப்பட்ட இவ் மோசமான தாக்குதல் சம்பவமானது எல்லோருக்கும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ள விடயமாகும்.

இந்த சம்பவம் ஒட்டு மொத்த முஸ்லீம் மக்களால் நடாத்தப்பட்ட விடயம் அல்ல. இது இஸ்லாமியரின் பெயரால் நடாத்தப்பட்ட ஒரு தீவிரவாத செயல் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த தீவிரவாத கும்பலை அடியோடு அழிக்க வேண்டும் என முஸ்லீம் மக்கள்
தீவிரமாக செயல்படுவதையும் நாம் அறிவோம். தொடர்ந்தும் எமது பகுதிகளிலில் கூட இவ்வாறான செயல் ஊடுறுவாகாமல் இருப்பதில் நாம் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கடற்பாடும் எம் அனைவருக்கும் உண்டு.

மதங்களுக்கிடையில் எந்தவித பிரச்சனைகளும் தோன்றாதிருக்க நாம் விழிப்பாக இருக்க வேண்டிய தேவைகளும் இருக்கின்றது. ஏதோ பின்புல சக்திகள் இவ்வாறான சூழ்ச்சிகளைச் செய்து இதை நடர்த்தியுள்ளனர். இது எமது நாட்டுக்கு ஒரு கரைபடிந்த சம்பவமாக இருக்கின்றது.

அத்துடன் இஸ்லாமிய சகோதரர்கள் மீதும் இது ஒரு பெரும் கரை படிந்த சம்பவமாக உருவாகியுள்ளது. ஆகவே நாம் உன்மை நிலையை உணர்ந்து கொண்டு ஒற்றுமையிலிருந்து பிரிந்திருக்காதிருக்க வேண்டும்.

இந்த நாட்டிலே மதம் சார்ந்த தீவிரவாதம் முற்று முழுதாக நீக்கப்பட
வேண்டும் என வேண்டி நிற்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது
இரங்களை தெரிவித்து நிற்கின்றோம். இறந்த ஆன்மாக்கள் இறைவன் பாதம் சரணடைய வேண்டும் எனவும் இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம். காயங்களுக்கு உள்ளாகியவர்களும் நற்சுகத்துடன் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் எனவும் இறைவனை நோக்கி வேண்டி நிற்கின்றோம்.

நாம் பின் நோக்கி பார்த்தால்' நாம் மிக மோசமான காலங்களை கடந்தே இங்கு
நிற்கின்றோம். யுத்தக் காலத்தில் நாம் எவ்வாறான துன்பங்களை சுமந்தோம்
என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். ஆகவே எதிர் காலத்திலும் அவ்வாறான சம்பவங்கள் நடக்காதிருக்க நாம் அனைவரும் ஒன்றுபட்ட சகோதரத்துவமாக வாழ முனைவோம் என இவ்வாறு தெரிவித்தார்.

கடந்தகால யுத்த சுமைகளை சுமந்த நாம் தொடர்ந்து அதில் பயணிக்க எம்மை ஆளாக்கக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினர்A.T.லுஸ்ரின் Reviewed by Author on May 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.