அண்மைய செய்திகள்

recent
-

போராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றார்களா முள்ளிக்குளம் மற்றும் இரணைதீவு மக்களின் மீளாத மீள்குடியேற்றம்

இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டு யுத்தம் தமிழ் மக்களை பல வழிகளில் மீளமுடியாத துயரத்திற்கு உள்ளாக்கியது
பல விதங்களில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்த விடையங்களிலும், பொருளாதாரம் சார்ந்த விடையங்களிலும், கல்வி சார்ந்த விடயங்களிலும் பின்னோக்கி தள்ளப்படும் அழவிற்கு யுத்தம் பெரும் அழிவை ஏற்படுத்தியது என்பது உலகம் அறிந்த உண்மையாகும்

அதே நேரத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்ககாவும் ,கால அவகாசம் கொடுக்க வேண்டாம் என்பதற்காகவும், காணி விடுவிப்புக்காகவும் என எண்ணில் அடங்கா போராட்டங்களை நடத்தும் மக்களின் போராட்டத்திற்கும் பொறுப்பான பதில்கள் இன்றுவரை இல்லை

அதே போன்று பல நாள் போராட்டங்களின் பின்னர்  கண்துடைப்புக்காக கையளிக்கப்பட்ட சில காணி விடுவிப்புக்களும் மீளவே குடியேற்றப்படாத எம் மக்களின் மீள்குடியேற்றமும் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றார்களா என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது

கடந்த 2017 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாம்  திகதி  தாங்களுடைய பூர்விக நிலமான முள்ளிக்குளத்திற்குள் தங்களை மீள் குடியேற்றுமாறு கோரி முள்ளிக்குளத்தை பூர்விகமாக கொண்ட மக்கள் கடற்படை முகாமுக்கு முன்பாக தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் 38 நாள் தொடர் போராட்டத்தின் பின்னர் சர்வதேசத்திடமும் அரசங்கத்திடமும் சென்றடைந்தது முள்ளிக்குள மக்களின் போரட்ட செய்தி

அதே நேரத்தில் 2017 ஆண்டு ஐந்தாம் மாதம் 1   திகதி கிளிநொச்சி இரணைதீவை பூர்வீகமாக கொண்ட மக்கள் தங்களுடைய பூர்விக கிராமத்தில் தங்களை மீள் குடியேற்றம் செய்ய கோரி தொடர் போரட்டத்தை மேற்கொண்டனர் 359 நாள் தொடர் போராட்டங்கள் நடத்தியும் இவர்களின் போரட்டத்தை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை எனவே இவ் போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரச அனுமதி இன்றி 100 மேற்பட்ட படகுகளில் 500 மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த முயற்சியில் இரணைதீவில் மீள் குடியேறினர்

அதன் பின்னரே சர்வதேச அழுத்தம் இவ்காணிகளை விடுக்க வேண்டும் என அரசாங்கத்தின் மீது திணிக்கப்பட்டதாலும் மக்களின் தொடர் போராட்டத்தினாலும் ஒன்றும்  செய்ய முடியாத நிலையில் இவ் இரு பிரதேச மக்களையும் தங்கள் பூர்விக காணிகளுக்குள் அனுமதித்தது அரசங்கம்

இரு கிராமத்தையும் சேர்ந்த மக்களும் கடல் சார்ந்த வாழ்வாதாரத்தை கொண்ருந்தனர் நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ் நிலை காரணாமக இரு பிரதேச மக்களும் கடற்படையின் கட்டாயத்தின் பெயரில் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள காட்டு பகுதிகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்

முள்ளிகுள மக்கள் அருகில் இருந்த காட்டு பகுதியான மலங்காடு எனும் பகுதியிலும் இரணைதீவு மக்கள் தீவிக்கு அருகில் இருந்த காடுகளை துப்பரவு செய்து இரணைமாத நகர் பகுதியில் தற்காலிகமாக குடியேறினர்

குறித்த இரு கடல் பகுதிகளும் அதிக கடல் வளங்களை கொண்ட பகுதிகளாகும்
கடல் அட்டை கருப்பு நண்டு முறுகைகற்பாறைகள் கடல் முத்துக்கள் என செழிப்பு மிக்க வளங்களை கொண்டு காணப்படுகின்ற பகுதி என்பதால் எனோ அரசாங்கம் இன்றுவரை இப்பகுதிகளை முழுமையாக விடிவிக்க விரும்பவில்லை

அதன் அடிப்படையில் சில இடங்களில் கடற்படையினர் குடும்பமாக இவ் பகுதிகளில் குடியேறியுள்ளனர் தொடர்சியான போரட்டங்கள் மத்தியில் பூர்வீக கிராமங்களில் குடியேறிய மக்களுக்கு ஒரு வருடம் கடந்து கிடைத்து இருப்பது ஏமாற்றம் மாத்திரமே

இரு பிரதேச மக்களும் மீள் குடியேறி ஒரு வருடம் ஆகியும் அரசங்கத்தினாலோ அரச அதிகாரிகளினாலோ மீள்குடியேற்றம் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை
தற்காலிக வாழிடங்களை கூட அமைக்க முடியாமல் குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லாமல் சுகாதார வசதிகள் இல்லாமல் மின்சார வசதி இல்லாமல் அகதி முகாம்களில் வாழ்ந்த அதே வாழ்கையை தங்கள் மூதாதையர் வாழ்ந்த நிலத்தில் வாழ்கின்றோம் என்ற ஒரே சந்தோசத்தில் ஏற்று வாழ்கின்றனர்

ஏனைய இன மக்களுக்கு நீண்டகால இடம் பெயர்ந்த மக்கள் எனும் அடிப்படையில் புதிதாக அமைச்சுக்களை உருவாக்கி துரித கதியில் மீள்குடியேற்ற வசதிகளை வீட்டுத்திட்டங்களை விரைவாக வழங்கும் அரசாங்கம்

போராட்டத்தின் மத்தியில் வாழ்வாதரத்திற்காக சொந்த கிராமங்களுக்கு சென்ற மக்களை இன்றுவரை மாற்றான் நிலையில் நோக்குவது எந்த விதத்தில் ஏற்புடையது என்பதே இவ் சமூகத்தின் ஒட்டு மொத்த கேள்வியாகும்

தொடர்ந்தும் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல்வேறு  துன்பங்களை சகித்து போராடிய மக்கள் தற்போது அகிம்சை வழியில் போராடுகின்றனர் இன்னல்களுடன் வாழும் இம்மக்களின் இயல்பு நிலை எப்போதுவரும் என்ற ஏக்கத்துடனே அடுத்த தலைமுறையும் தோற்றம் பெருகின்றது

நீர் இன்றி அமையாது உலகு என்பது போல் நிலம் இன்றி ஓயாது இவ் மக்களின் முடிவு
வாழ்வோ சாவோ எதுவோ அது தம் பூர்வீக நிலத்திலே நடக்கவேண்டும் என்பதே இம் மக்களின் ஒருமித்த குரலாகும்

போராடி பெற்றாலும் எங்கள் நிலங்களை தான் நாங்கள் பெற்றோம் நாங்களும் இந்த நாட்டினுடைய குடிமக்களே எனவே எங்களுக்கு சொகுசு வாழ்கையோ ஆடம்பர வசதிகளோ வேண்டாம் நாங்கள் எமது பூர்விக நிலத்தில் அடிப்படை வசதிகளுடன் திருப்திகரமான ஒரு சாதாரண வாழ்கை வாழ்வதற்கான ஏற்பாட்டையாவது செய்து தருமாறும் இவ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

பாராமுகமாக செயற்படும் இவ் நல்லாட்சி அரசாங்கம் இவ் மக்களின் கோரிக்கையை ஏற்குமா இல்லாவிடத்து ஒவ்வொரு தேவைக்கும் போரடிதான் தீர்வைப் பெறவேண்டும் என்பது தான் தமிழ் மக்களின் நிலையா எனும் கேள்வியோடு தொடர்கின்றது இம் மக்களின் மீளா மீள்குடியேற்றம்.
-J-நயன்-


போராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றார்களா முள்ளிக்குளம் மற்றும் இரணைதீவு மக்களின் மீளாத மீள்குடியேற்றம் Reviewed by Author on May 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.