கிளிநொச்சியில் நடந்த அனர்த்தம்; தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய பாலகன் பரிதாபச் சாவு!
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கட் கிழமை மாலை தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஆறு வயது மகன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் பற்றி சிறுவனின் குடும்பத்தினர் கூறியதாவது,
தந்தை வயலுக்கு சென்று விட்டு வீட்டில் உழவு இயந்திரத்தை திறப்புடன் நிறுத்தி வைத்து உணவருந்திக்கொண்டிருந்துள்ளார். அந்தச் சமயம் குறித்த சிறுவன் உழவியந்திரத்தில் ஏறி அதனை இயக்கியுள்ளர்.
இதனால் உழவியந்திரம் நகரத்தொடங்கி அருகில் உள்ள மரத்துடன் மோதியபோது குறித்த சிறுவன் தவறி வீழ்ந்து சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடைய மாணவன் எனவும் வகுப்பில் மிகவும் துடிப்புள்ள மாணவனாக இருந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்லது.
இந்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கிளிநொச்சியில் நடந்த அனர்த்தம்; தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய பாலகன் பரிதாபச் சாவு!
Reviewed by Author
on
May 22, 2019
Rating:

No comments:
Post a Comment