அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் ஓர் அளவு நிம்மதியும் அமைதியும் இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு வாழ்து வரும் நிலையில்-மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை.

ஒருவரை ஒருவர் புறிந்து கொண்டு,விட்டுக் கொடுத்து எப்படி ஒருவர் மற்றவரை மதித்து வாழ்கின்றோமோ அங்கே தான் நாங்கள் அமைதியை காண்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ  ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலின் போது உயிர்களை தியாகம் செய்து உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் இடம் பெற்றது.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை லக் கோன்ஸ் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.

முதலில் நுழைவாயிலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் சர்வமத பிரதி நிதிகள் பணியாளர்கள் அனைவரும் கருப்பக்கொடியை ஏந்தியவாறு மண்டபம் வரை சென்றனர். பின்னர் உயிர் நீத்தவர்களுக்காக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின் உரை நிகழ்த்துகையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ  ஆண்டகை அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

நாங்கள் சுடர் ஏற்றி இறைவனிடம் கேட்டு நிற்பது மறித்த அம்மக்களுக்கு நித்திய இளைப்பாற்றியைக்கொடுக்க வேண்டும் என்றும்,அவர்கள் நம்பிக்கையோடு உயிர்த்த ஆண்டவரின் விழாவைக் கொண்டாட வந்திருந்த அந்த வேளையில் உயிர்களை அவர்கள் தியாகமாக கொடுக்க வேண்டிய நேரிட்டது.

அது எங்கள் அனைவரையும் பாதீத்துள்ளது.இந்த அசம்பாவிதத்தினால் இன்றும் எங்கள் மனங்கள் துயருடனும், பயத்துடனும் இருக்கின்றன. நாட்டில் ஓர் அளவு நிம்மதியும் அமைதியும் இருக்கின்றது என்று நாங்கள் நினைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கையில் இப்படியான ஒரு கொடூரமான பயங்கரவாத செயற்பாட்டினால் மூன்று கிறிஸ்தவ தேவலாயங்களிலும், மற்றும் ஹோட்டல்களிலும் ஏனைய இடங்களிலும் இடம் பெற்ற இந்த குண்டு வெடிப்புக்களினால் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்ற போது அவ் இடங்களில் இருந்தவர்களுடைய கதைகளை கேட்கின்ற போது மிகவும் வேதனை ஏற்படுகின்றது.

ஏன் இப்படி ஒரு சம்பவம்?எமது நாட்டின் பாதுகாப்பு போதமையினாலா? அல்லது மக்கள் ஒருவருக்கு ஒருவர் விரோதமாக செல்லுவதினாலா?என்று தெரியவில்லை.

நாங்கள் ஒன்று கூடி வாழ வேண்டும்.ஒருவரை ஒருவர் பாதுகாக்க வேண்டும்.

நாங்கள் வாசிக்கக் கேட்ட தூய பவுல் அடிகளாரின் அந்த வசனங்கள் நாங்கள் எப்படி நம்பிக்கையோடு வாழ வேண்டும்.
எமது உடல்கள் நிலையற்றதாக இருந்தாலும் நாங்கள் அதனை பாதுகாக்க கடமைப் பட்டிருக்கின்றோம் என்று எமக்கு தெழிவாக கூறியுள்ளது.

ஆகவே நாங்கள் அனைவரும் மற்றவர்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றோம்.நாங்கள் வௌ;வேறு மொழிகள் பேசுகின்றவர்களாகவும், வௌ;வேறு மதங்களில் இருப்பவர்களாகவும் வாழுகின்றோம்.

எங்கள் மத்தியில் ஒற்றுமை,நல்லிணக்கம் இருப்பது மிகவும் அவசியமாகும்.சக வாழ்வு என்று நாங்கள் கூறும் போது நாங்கள் மதங்களுக்கு இடையே இருக்கின்ற இனக்கப்பாடு,ஒருவரை ஒருவர் புறிந்து கொண்டு,விட்டுக் கொடுத்து எப்படி ஒருவர் மற்றவரை மதித்து வாழ்கின்றோமோ அங்கே தான் நாங்கள் அமைதியை காண்கின்றோம்.

வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை லக்கோ ன்ஸ் அடிகளாருக்கும்,இந்த நிறுவனத்திற்கும் நன்றி கூறுகின்றோம். இங்கு வருகை தந்துள்ள சர்வமத தலைவர்களுக்கும் அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும் நன்றி கூறிக்கொள்கின்றேன்.நாங்கள் இன்னும் எங்கள் மத்தியிலே ஒற்றுமையினையும்,அமைதியினையும் வளர்த்திட எங்களுக்கு இறைவன் அருள் புறிய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
















நாட்டில் ஓர் அளவு நிம்மதியும் அமைதியும் இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு வாழ்து வரும் நிலையில்-மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை. Reviewed by Author on May 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.